பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் பகுதிக்கு செய்தது போல் அடுத்த நான்கு குறட் பாக்களைப் பாடினாற் போல் தோன்றுகிறது.

இன்சொல்லின் எதிர்மறை வன்சொல். இன்சொல்லைப் பற்றி இனியவையே கூறி விட்டால், போதுமா? இது மிகையாக கூறப்பட்டதாக படிப்பவர் மனம் எண்ணிவிடக் கூடாதென்று, அடுத்து வருவது வன்சொல் வேண்டாமை என்ற அறிவுரைப் பகுதி. ஏன் வேண்டாம்? இதற்குக் காரணம் கூறுவதாக அமைவதே இவ்வதிகாரத்தின் கடைசி குறட்பா.

வள்ளுவர் இன்சொல்லைப் பற்றி என்ன கூறுகிறார் t irrrit’ Giufrlorr ?

இன்சொல் என்றால் என்ன?

வாயிலே பிறப்பது சொல். இதற்கு அடிப்படை மனம். மனம் நினைப்பதை வாய் சொல்லும். இனிய மனத்தினின்று மட்டுமே இன்சொல் பிறக்கும். இன்றேல் மனத்தினின்று இன்னா சொல் பிறக்கும்.

இன்சொல் தன்மைகள் யாவை? உதட்டளவிலே தோன்றி வருவதல்ல இன்சொல்: மனத்தினின்று உள்ளன்புடன் தோன்றும். உண்மையான அன்பு கொண்ட தாக இருக்கும். அன்பு கொண்ட செந்தண்மையில் பிறவாம விருக்க முடியுமா? மாசற்ற மனம் என்னும் உரத்திலே, செந்தண்மை நீர் ஊற்றப்பட்டு, அறம் வளர்ந்த உள்ளத்தே இனிய சொற்களே பிறக்கும்.இவற்றில் வஞ்சனை கிடையா. இனிய சொல்லின் பளிங்கு முகம். இனிமையான முகமே இனிய சொல்லின் பறை, அகம் மகிழும்; முகம் மலரும். இதுவே இன்சொல்லின் இலக்கணம். இந்த இலக்கணம் பின்பற்றுவோருக்கு மனமகிழ்ச்சிக்குக் குறைவே இருக்காது. அது ஈகையிலும் சாலச் சிறந்தது.

அடுத்த குறளை சற்று உன்னிப் பார்ப்போம்.

‘பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற’

64