பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறை தந்தவர். பணிவிலா இன்சொல் , போலியானது: விரும்பத்தக்கதுமல்ல.

ஆதல்:

இன்சொலன் ஆதல் என்று திருவள்ளுவர் கூறுவானேன்? இன்சொல்லாக ஒன்று கருதப்படுவது எப்போது? பணிவுடன் கூடி ஒன்றாகிய பின்னரே. எனவே ஆதல் என்ற சொல் கையாளப்பட்டது.

மற்றும் பிற அல்ல:

நிறைய புற அணிகளை அணியலாம்; அழகு ஏற்படுவ தாகக் கற்பனை செய்யலாம்; மகிழலாம்; மயங்கலாம்; ஆனால் முடிவு? அழிவே, புற அணியால் மகிழ்பவர்கள் அழிந்து லிடுவார்கள். அவர்கட்கு நல்லறிவு புகட்ட வேண்டி ‘மற்றும் பிற அல்ல!” என்றார்.

அழகு அக அணிகளில் உள்ளதேயன்றி புற அணிகளில் அல்ல, இதனையே வள்ளுவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.

இன்சொல்லால் பயன்

நல்லவற்றையே விரும்பி, இனியவை சொன்னால் தீயன தேயும். அறம் வளரும். இன்சொல்லால் அல்லவை தேய்ந்து அறம் பெருகும். இது பொதுப்படை.

இனிமையினின்று சிறிதும் வழுவாது இன்சொல்; அன்பை உண்டாக்கும்; அன்பு உண்டானவுடன் இன்பம் வரும். அறத்தை வளர்க்கும். இன்சொல் அன்பாலும் அறத்தை வளர்க்கும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இன்சொல் வழங்குவோரிடத்தும் கேட்போரிடத்தும், ஆக இரு சார்பிலும் நயனையும் பயனையும் பயக்கும் தன்மை புடையது.

இன்சொல்லே பேசினால், அது வறுமையை விரட்டி விடும். வறுமை இன்சொல் உடையவனை அணுகவே அணு காது. இருமை இன்பந்தக் கூடியது இன்சொல்.

66