பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102

தேர்தல் சூடு பிடித்தது. தமிழ் காட்டில் உள்ள புதுக் காங்கிரஸ் தலைவர் சிலரும் தொண்டர் பலரும் காவேரிப் பாக்கத்தில் குழுமினர். சிறை புகுந்த செல்வங்களும், அன்னங்களும் செறிந்தன. புதுக் காங்கிரசின் சக்தி அங்கே சண்டதாண்டவம் புரிந்தது. ஒவ்வொருவரும் சிறையில் தாம் அநுபவித்த துன்பங்களை எடுத்து ஒதினர். திரு. வி. க. சிறை செல்லாதவர் என்று இடையிடையே முழங்கினர்.

திரு. வி. க.வும், கண்பர்களும், தொண்டர்களும் காவேரிப்பாக்கம் வட்டாரம் முழுவதும் சுற்றினர்; நிலைமையை விளக்கினர்.

இரு முகாம்களிலும் காங்கிரஸ் கொடி, கதர் உடை. போராட்டம் கன்றாயிருந்தது. முடிவைத் தென்னுடே ஆவலுடன் எதிர் பார்த்தது.

முடிவு என்ன? திரு. வி. க. வுக்கு வெற்றி, முனி சாமி முதலியார் ஆயிரக்கணக்கில் பெருவாரியான ஒட்டு பெற்று வெற்றியடைந்தார்.

“இஃது எனது வெற்றியன்று; நீதிக்கும் அறத்துக் கும் ஏற்பட்ட வெற்றி’ என்றார் திரு. வி. க.

ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நெருங்கியது. வெற்றி பெற்ற அங்கத்தினர் எல்லாரும் சென்னை போக்தனர். காங்கிரஸ் மாளிகையில் கூடினர். இராஜ கோபாலாச்சாரியாரே காரியங்களை கடத்தினர். ஜில்லா போர்டு தலைமைக்குக் கண்ணப்ப முதலியார் நியமிக்கப் பட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர் எவர்? காங்கிரசால் நியமிக்கப்பட்ட கண்ணப்ப முதலியாரா? இல்லை; இல்லை. காங்கிரஸ் அல்லாத நவாப் அப்துல் ஹக்கீம்.