பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109

கத்தில் திரு.வி.க.வுக்கும் தொடர்பு இருந்தது. கேசவப் பிள்ளையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றார், திரு.வி.க.

மில் தொழிலாளர்தம் குறைகள்பற்றிக் கட்டுரைகள் பல எழுதி வந்தார் கேசவப்பிள்ளை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அக்கட்டுரைகள் “இந்தியன் பேட்ரியட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தன.

அவைகளில் சிலவற்றைத் தமிழிலும் மொழி பெயர்த்துத் தேசபக்த'னில வெளியிட்டு வந்தார் திரு.வி.க.

1918ம் ஆண்டு மார்ச்சு மாதம் 2ந்தேதி சனிக் கிழமை ஜங்கா ராமியம்மாள் பங்களாவில் வேங்கடேச குளுமிர்த வர்ஷணி சபை சார்பில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. . அக்கூட்டத்துக்குப் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர் கூடிச் சிறப்பித்தனர்.

அக்கூட்டத்தில் திரு.வி.க. பேசினர். மேற்கு காட்டில் தொழிலாளரியக்கம் தோன்றிய வரலாற். றையும், பொருளாதார விடுதலையின் மாண்பையும் தொழிலாளர் சங்கத்தின் அவசியத்தையும் விளக்கிப். பேசினர்.

தொழிலாளரிடையே உற்சாகம் கரை புரண்டு ஓடியது. தொழிலாளர் சங்கம் எப்பொழுது அமைக்கப் படும்? எப்பொழுது அமைக்கப்படும்?’ என்ற பேச்சே தொழிலாளரிடையே உலவலாயிற்று.

திவான்பகதூர் கேசவப் பிள்ளையைக் கண்டார் திரு.வி.க. தொழிலாளர் சங்கம் காணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். அவ்வாறு சங்கம்