பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122

என்ன? ஸர். பி. தியாகராச செட்டியார் தலையிட்டதே காரணம்.

‘திரு. வி.க.வை கரடு கடத்தினுல் ஜஸ்டிஸ் மந்திரி மார் பதவி விலகுவர்’ என்று விலிங்டனிடம் கூறினர் செட்டியார். காடு கடத்தும் எண்ணத்தை விட்டார் லார்ட் விலிங்டன்.

1947ல் திரு. வி. கவை வீடு காவலில் வைத்தார் காங்கிரஸ் முதன் மந்திரி ஒ. பி. ராமசாமி ரெட்டியார்.

ஜஸ்டிஸ் தலைவர் ஸர் பி. தியாகராய செட்டியாரோ மைந்திரி பதவியை ராஜிநாமா செய்வோம்’ என்று கூறி லார்ட் விலிங்டனை அச்சுறுத்தினர்.

போற்றற் குரிய செயல எவருடையது? காங்கிரஸ் காரருடையதா? ஜஸ்டிஸ் காரருடையதா?

திரு. வி. க. தேசபக்தன் ஆசிரியராயிருந்தபோது சென்னை பிரசிடென்சி கல்லூரியினின்றும் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் விலகினர். அப்பதவியில் திரு. வி. க வை அமர்த்த உளங் கொண்டார் ஸர். பி. தியாகராய செட்டியார். கா. நமச்சிவாய முதலி யாரும் திரு. வி. க வை நெருக்கினர். அப்பதவியை ஏற்குமாறு வற்புறுத்தினர். ஆல்ை திரு. வி. க. அதை ஏற்க மறுத்தார். தேச சேவையையே தாம் விரும்புவ தாகக் கூறிவிட்டார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஐந்தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28க் தேதி எலர். பி. தியாகராய செட்டியார் மறைந்தார்.

அது போது கவசக்தி'யில் தலையங்கம் ஒன்று எழுதி வெளியிட்டார் திரு. வி. க. அத்தலையங்கத்தின் கடைசிப் பகுதியை இங்கு குறிப்பிடுகிறேன்.