பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

127

அச்சமயம் சட்ட உறுப்பினராயிருந்தவர் எவர்? ஜஸ்டிஸ் கட்சித் தலைவருள் ஒருவராகிய ஸர். கே. வி.

ரெட்டி.

சிறை மீண்டார் பெரியார்; சமதர்மக் கண் இழக் தார். வகுப்பு வாதத்திலேயே மீண்டும் புரளலார்ை. திரு. வி. க. கட்டிய மனக்கோட்டை இடிந்தது.

பெரியாரின் வாழ்க்கைத் துணைவி காகம்மாள் காலமானர். அவர் தம் உருவப்படத்தைத் திறந்து வைத்தவர் எவர்? திரு. வி. க. எங்கே? ஈரோட்டில்.

சீர்திருத்தத் திருமணங்கள் நிகழும். அத்திருமணங் களில் இருவரும் கலந்து தொண்டாற்றுவர். அவ் விருவர் எவர்? ஒருவர் திரு. வி. க. இன்ைெருவர் பெரியார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து ஏழாம் ஆண்டிலே காங்கிரஸ் சார்பிலே பல மாகாணங்களில் மந்திரி சபைகள் அமைந்தன.

சென்னை மாகாணத்திலும் காங்கிரஸ் மந்திரிசபை அமைந்தது. அம்மந்திரிசபை என் செய்தது? இந்தியைக் கட்டாயமாக்கியது. இதை எதிர்த்தார் பெரியார்.

பெரியார் தலைமையில் பல்லாயிரவர் சிறை சென்றனர். பெரியாரைச் சிறையில் தள்ளியவர் எவர்? முதன் மந்திரி சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்.

ஆச்சாரியாரின் செயலைக் கண்டித்து கவசக்தி’ யில் எழுதினர் திரு. வி. க.

‘நண்பரே! ஆச்சாரியாரே! உம்மை இராவணு காரம் சூழ்ந்திருக்கிறது” என்று எழுதினர் திரு. வி .க.