பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

133

அரசியல் கூட்டத்தைத் தோற்கடிக்கும். அங்கே திரு.வி.க நிற்பார். அடியவர் செயலைக் கண்டிப்பார். பெண்களுக்கு உதவி புரிவார்.

மாயவரத்திலே காகபாசத்தார் சங்கம் என்ற ஒன்று காணப்பட்டது. அது பின்னே இசை வேளாளர் சங்கமாக மாறியது. அங்கத்தின் துரண் போன்று விளங்கியவர் ஓர் அம்மையார். அவர் பெயர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்பது. தஞ்சை ஜில்லா லே அவர் செய்த சேவை மறக்க முடியாத ஒன்று. அவ்வம்மையார் எங்கு சென்றாலும் வழுக்கி வீழ்ந்த சகோதரிமார் கூட்டம் அவரைச் சூழந்திருக்கும்.

மூவலூர் இராமாமிர்தம் ஒரு மகாகாடு கூட்டினர். இசை வேளாளர் மகாகாடு. அதாவது 1925ம் ஆண்டு. அம்மகா காட்டிலே திரு.வி.க முழங்கினர்; வழுக்கிய சகோதரிமார் வரலாற்றினை எடுத்துரைத்தார். அவர் கோயில் புக நேர்ந்ததைக் கூறினர். இசையும் காட்டிய மும் வளர்ந்த விதத்தைக் கூறினர். பொட்டுக்கட்டலை அறவே ஒழித்தல் வேண்டும் என்று முழங்கினர். இக்கிளர்ச்சியின் விளைவு என்ன? டாக்டர் முத்து லட்சுமி அம்மையார் சென்னைச் சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வந்தார். தாசி ஒழிப்பு மசோதா என்பது அதன் பெயர். கோயில்களில் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிப்பதே அம் மசோதாவின் கோக்கம்.

அம் மசோதாவுக்கு எதிர்ப்புகள் தோன்றின. கவசக்தி வாயிலாக முத்துலட்சுமி அம்மையாருக்கு ஆதரவளித்தார் திரு.வி.க. கூட்டங்களில் பேசினர்.

இளமை மணத்தை ஒழிக்க வந்த சாரதா மசோதா வக்கும் ஆதரவு தந்தார் திரு.வி.க.