பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

134

கைம்மை மணம் கலப்பு மணம் ஆகியவற்றுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்.

பெண்ணின் பெருமை’ என்று ஒரு நூல் எழுதி யிருக்கிறார் திரு.வி.க. இந்நூல் 1927ம் ஆண்டு முதன் முதலாக வெளிவந்தது. அதன் பிறகு பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

இந்நூல் முத ன் மு. த ல் வெளி வந்தபோது கலியாணன் நூல், கலியுகநூல் என்றார் தமிழ் அறிஞர் ஒருவர். அவர் பெயர் கி. குப்புசாமி முதலியார் என்பது.

குப்புசாமி முதலியார் சிறந்த தமிழ் அறிஞர். ஆனுார் சிங்காரவேல் முதலியாரிடம் தமிழ் பயின்றவர். பழைமையில் பெரும் பற்றுடையவர். சீர்திருத்தங் கண்டு சீறுபவர். 1914ம் ஆண்டுமுதல் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் செயலாளராக இருந்தவர்; பல ஆண்டுகள் இருந்தவர். திரு.வி.க.வைச் சிறு வயது முதல் அறிந்தவர். குழந்தை’ என்று அன்போடு திரு.வி.க.வை அழைப்பவர்.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு சைவ சித்தாந்த சமாஜத்தின் ஆண்டு விழா திருவதிகையில் நடைபெற்றது. திரு.வி.க. தலைமை வகித்தார்.

குப்புசாமி முதலியார் சொற்பொழிவு நிகழ்த்தினர். எடுத்துக்கொண்ட பொருள் திருவெம்பாவை. தமது பேச்சின் இடையே அவர் என் செய்தார்: திரு.வி.க. வின் பெண் உரிமைக் கொள்கையைத் தாக்கினர்.

திரு.வி.க. தமது முடிவுரையில் என்ன கூறினர்: திருவெம்பாவை பெண்மையையே அடிப்படையாகக்