பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

139

தீட்சை செய்துகொள்ளுமாறு திரு.வி.க.வைப் பெரிதும் வற்புறுத்தியவர் வண்டிப்பாளையம் இராசப்ப முதலியார். சிதம்பரம் முத்துக்கற்பக தேசிகரைக் கொண்டு திரு.வி.க.வுக்குத் தீட்சை செய்வித்தார் இராசப்ப முதலியார். சமயம் விசேடம் என்ற இரண்டு தீட்சைகள் பெற்றார், வேளைக்குவேளை முறைப்படி அனுஷ்டானம் செய்து வந்தார் திரு.வி.க.

ஆனல் அவர் மனம் அதில் ஆழ்ந்ததே இல்லை. அஃது இயந்திர வேலைபோல் அவருக்குத் தோன்றியது. எனினும் இயகதிரத்தை இயக்கி வந்தார்.

துரத்துக்குடிச் சைவ சித்தாந்த சபைக்குச் சென்றார் திரு.வி.க. அங்கே என்ன கண்டார்? ஒருவர் செய்த அனுஷ்டானத்தை இன்னொருவர் குறை கூறுதல் கண்டார். புறத்துக்கு மக்கள் அடிமையாயிருக்கிறார் களே என்று கினைத்தார். அக்த கினைப்பு அவரது அனுஷ்டானத்தை நிறுத்தியது.

சைவம் ஒன்றே மெய்ம்மையுடையது என்றும் அதுவே வீடுபேற்றுக்குரியது என்றும் தொடக்கத்தில் கம்பினர் திரு.வி.க. பின்னே அந்த கம்பிக்கை சிறிது சிறிதாக மறைந்தது.

சிவஞானசித்தியாரில் உள்ள பின்வரும் பாடல் சைவ சமயத்தின் சமரசத்தைத் திரு.வி.க.வின் உள்ளே விதைத்தது.

ஒது சமயங்கள் பொருளுணரு நூல்கள்

ஒன்றாேடொன் ருெவ்வாமல் உளபலவும் இவற்றுள்

பாது சமயம் பொருள்நூல் யாதிங் கென்னில்

இதுவாகும் அதுவல்ல எனும் பிணக்கதின்றி