பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

166

ஒரு நாள் இரவு. இடது பக்கம் மருதுார் காராயண சாமி படுத்தார். வலதுபக்கம் ஜவுளி நடேச முதலியார் படுத்தார். விளக்கு கன்றாக எரிந்து கொண்டிருந்தது.

சுமார் மூன்று மணியிருக்கும் திரு. வி. க. எழுக் தார். விளக்கினை எடுத்துக் கொண்டார். தெருப் பக்கம் சென்றார், சிறுநீர் கழித்தார். எழுந்து கின்றார்,

மாடு ஒன்று விரைந்து ஓடி வந்தது கண்டார் திரு. வி. க. விளக்குடன் வீட்டுக்குள் ஒடினர். இடை யில் தடுத்தது ஒரு பலகை. வீழ்ந்தார். உடலில் பல இடங்களில் காய முற்றது. கால் முட்டிகளிலும் பெருங் காயம் ஏற்பட்டது. உதட்டிலும் காயம். உதடு வீங்கியது. சக்தடி செய்யாமல் சென்று படுக்கையில் கிடந்தார். உதட்டில் கை வைத்துப் பார்த்தார். மேல் வரிசைப் பற்களில் ஒன்று உடைந்தது கண்டார்.

எப்பொழுது பொழுது புலரும் என்று காத்திருக் தார். பொழுதும் புலர்ந்தது. மயிலை பாலசுப்பிரமணிய முதலியார் எழுந்தார். மெதுவாக அவரை அடைந்தார் திரு. வி. க. இரவு கடந்ததைக் கூறினர். கண்பர் பலரும் சூழ்ந்தனர். மிக வருந்தினர்.

உதட்டு வலியைத் திரு. வி. க. வெளியிடவே இல்லை. இரண்டு காள் கூட்டம் கடை பெற்றது. முன்னுரையும் முடிவுரையும் கிகழ்த்தினர் திரு. வி. க.