பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

21. நோயும் பத்திய உணவும்

துள்ளத்தில் வாழ்ந்த போது திரு. வி. க வின் உணவு எப்படி இருந்தது? காலையில் இட்டலி. பகலில் சோறு. பிற்பகலில் வடை, இரவில் சோறு.

இராயப்பேட்டை சேர்ந்த பிறகு இட்டலியின் இடத்தைப் பற்றிக் கொண்டது பழஞ்சோறு. பிற் பகலில் வீட்டு வடை போயிற்று. தண்ணிர் பந்தல் வடையே கிடைத்தது. பள்ளி வாழ்க்கை முழுவதும் இத்தகைய உணவே.

பின்னே பழஞ்சோறு போயிற்று; சுடுசோறு வந்தது. நாளடைவில் சுடுசோறும் போயிற்று. கோதுமை அப்பம் வந்தது.

சில காலம் காலையில் பால் அருந்தினர். பின்னே அதை விடுத்தார். மோர் அருந்தினர். பின்னும் சில காலம் சென்றது. காலை உணவு கியதி போயிற்று. எது கிடைத்ததோ அதை உண்டார்.

காலையில் பூரி. பகலில் பொங்கல். மாலையில் பூரி இப்படிச் சில காலம்.

திரு. வி. க. வின் உடலுக்குப் பொருந்தியது ஆவின்பாலே. எருமைப்பால் உண்டால் சிறிது கேரத்துக் கெல்லாம் வயிற்றுக் கடுப்பு உண்டாகும்.