பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

169

இவற்றில் சீவ சத்துண்டு என்பதையும் அவர்

அறிவார். ஆனல் அப்பழக்கம் அவருக்கில்லை. சில இடங்களில் விருந்துண்ட பின் வெற்றிலை பாக்குத் தட்டு வரும். திரு. வி. க. அவற்றைத் தொட்டு வைத்து விடுவார். வெற்றிலை போடமாட்டார்.

புளி மிளகாய் முதலியவற்றைச் சில காலம் வெறுத்தார் திரு. வி. க. எலுமிச்சம் பழச்சாறும் மிளகும் உண்டார். அக்காலத்தில் திரு. வி. க. சென்ற இடம் எங்கும் அவருக் கென்று தனிச் சமையல் கடை பெறும். அச் செயல் திரு. வி. க.வின் உள்ளத்தை வருத்தும். எனினும் அவ்வுணவு அவர் உடலுக்குப் பெரிதும் துணை செய்தது. தனிச் சமையல் அவர் மனத்தை வருத்தியதால் அவ்வுணவை விட்டார்.

1929 ம் ஆண்டுத் தொடக்கத்திலே திரு. வி. கவுக்குச் சினுக்கிருமல் தோன்றியது. அவ்விருமல் அடங்கவில்லை. டாக்டர் மாணிக்கம் பிள்ளை என்பவர் தியாசாபிகல் சங்கத்தினர்; திரு. வி. க.வின் தோழர். அவர் ஒரு நாள் திரு. வி. கவைக் கண்டார். இவ் விருமலை முளையிலேயே கிள்ளிவிடல் வேண்டும் இன்றேல் இஃது எலும்புருக்கியாய் முதிரும் என்றார்.

அவரது கூற்றை டாக்டர் சம்பந்தத்திடம் தெரி வித்தார் திரு. வி. க. டாக்டர் சம்பந்தம் என்ன செய் தார்?எக்ஸ்ரே எடுத்தார். பார்த்தார். பார்த்ததில் என்ன கண்டார்? நுரை ஈரலில் எவ்விதத் தவறும் இல்லை என்று கண்டார். எதற்கும் முன் எச்சரிக்கையா .யிருப்பது நல்லது என்றார்,

அவர் கூறியவாறே பல்லாவரம் சென்று வதிந்தார் திரு.வி.க. சம்பந்தம் சில கியதிகளை விதித்தார். அக்