பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

j87

வண்டி கொண்டு வந்திருப்பார்கள். ஆனல் திரு வி.க. அவ்வண்டியில் ஏறமாட்டார். விடியற்காலமாகில் கடந்தே செல்வார். அன்பர்கள் தொடர்வார்கள். இயற்கை வனப்பில் மூழ்கி எழுவார். திரு.வி.க. வைகறைப் ப ற ைவ க ளி ன் ஒளியிலே ஒன்றித் திளைப்பார்.

கடக்கும்போது அரையில் கட்டிய வேட்டியின் ஒரு துணியை ஒரு கையால் துாக்கிப்பிடித்துக்கொண்டு

கடப்பார்.

பொதுக்கூட்டம் போடுவது என்றால இந்தக் காலத் திலே என்ன காண்கிருேம்? அலங்கார மேடை காண் கிருேம். மின்சார விளக்குகள் ஒளி வீசக் காண்கிருேம். ஒலிபெருக்கிகள் ஒலிக்கக் காண்கிருேம். லட்சக்கணக் கான மக்கள் கூடியிருக்கிறார்கள். தொலைவில் உட்கார்ந்திருப்பவர்களும் தெளிவாகக் காண்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனல் அந்தக் காலத்தில் அப்படி இல்லை. ஒலிபெருக்கி இல்லாத காலம். பெரும்பாலான இடங்களில் ‘கியாஸ் அலட்டுகளே இருக்கும். உயரமான மேடைகள் அமைக்கப் பட்டதில்லை. கூட்டமோ ஆயிரக்கணக்கில் இருக்கும்.

திரு.வி.க. பேசுவார். உரத்த குரலில் முழங்குவார். கடைசி வரிசையில் இருப்போருக்கும் தெளிவாகக் கேட்கும். வேகமாகப் பேசுவார். கணிரென்ற குரல். நீர் வீழ்ச்சிபோல் தமிழ் பாயும், இடித்து முழங்கும்.