பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38

வருவார்; நெற்றியில் உள்ள காயை வெட்டுவார். மற்றும் ஒரு முறை மார்பில் உள்ள காயை வெட்டுவார்.

இவ்வாறு கத்தி சுழற்றிக் காய் வெட்டும் வித்தை கலியான சுந்தரனுரைக் கவர்ந்தது. தாமும் அது கற்க விரும்பினர். முதல் முதல் மரக்கத்தியில் பயின்றார், பின்னர், கூரிய பட்டாக் கத்திப் பயிற்சியில் இறங் கினர். காயை வெட்டும்போது அச்சம் தோன்றியது. அவ்வளவில் கத்தி சுழற்றலை விட்டார்.

மற்களத்தின் அருகே தென்னங் தோப்பு ஒன்று. இருந்தது. அத்தோப்பிலே பெரியதொரு கிணறு இருந் தது. அக் கிணற்றில் மல்லர் பலர் குதித்து நீந்துவர். தவளை நீச்சு, காக்கை நீச்சு முதலிய பலவக்ை கீந்தல் கிகழும். வடிவேல் முதலியார் தண்ணிரில் மிதப்பார். சூழ்ந்து கின்று பலர் வேடிக்கை பார்ப்பார்.

நீச்சல் பித்து கலியான சுந்தரனுரையும் பற்றியது. வடிவேல் முதலியாரிடம் தமது பித்தைத் தெரிவித்தார். கலியாண சுந்தரனுரைப் பிடித்துக் கிணற்றில் தள்ளி விட்டார் வடிவேல் முதலியார். அவர் மூழ்கி எழும்பிய வேளையில், ஒருவர் வந்து அவரைப் பற்றினர். தாம் கயிறு கொண்டு இடுப்பிலே கட்டிப் பிடித்துக் கொண்டு கலியான சுந்தரனுரை நீந்த விடுத்தார்.

நீந்தக் கற்பிக்கும் முறை இதுவாம். இவ்வாறு கலியான சுந்தரனுர் நீந்தப் பழகுதலை அறிந்தார் அவரது தந்தையார்; பலவாறு ஏசினர்; கடிந்தார். அவ்வளவில் கலியான சுந்தரனரின் நீச்சல் பயிற்சி நின்று போயிற்று.

பெரியபாளையத்தம்மன் கோயில் அருகே ஒவ்வொரு சமயம் பிச்சைக்காரர்கள் கூட்டம் திரளும். அவருள்