பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86

தேசபக்தன்’ எம் மொழிப் பத்திரிகை என்று: வினவினர்.

“தமிழ்ப் பத்திரிகை” என்றார் திரு. வி. க.

“நீர் பட்டதாரியா?” என்று கேட்டார் மகாத்மா,

“அல்லன்; மெற்றிகுலேஷன் வரை ஆங்கிலம் பயின்றவன்; தமிழாசிரியனுக இருந்தவன். எனது. ஆங்கில அறிவு மொழி பெயர்ப்பு அளவில் பயன்பட்டு வருகிறது” என்றார் திரு. வி. க.

என் பேச்சை மொழி பெயர்ப்பீரோ? இது மகாத் மாவின் கேள்வி.

தொழிலாளர் சார்பில் கூட்டப் பெறும் கூட்டங்களில் கானே மொழி பெயர்ப்பாளனுக இருப்பேன். மற்றகூட்டங்களில் எப்படியோ?” என்றார் திரு. வி. க.*

மகாத்மாவின் ஞாபக சக்தி அதி ஆச்சரியமானது. நவ சக்தி ஆசிரியர் திரு. வி. கலியாண சுந்தர முதலியார், அடிகளைப் பார்க்கச் சென்றபோது காந்திஜி முதன் முதல் சென்னையில் என்னுடைய பிரசங்கங்களை மொழி பெயர்த்த வர் நீங்கள்தானே. ஒருமுறை ஒரு சொற்றாெடரை நீங்கள் விட்டு விட்டீர்கள். நான் திருத்தினேன். நினைவிருக்கிறதா?” என்றார்.

ஆறு வருஷத்துக்கு முன் நடந்த சில கூட்டங்களில் தமது பிரசங்கத்தை மொழி பெயர்த்தவரையும் அவர் ஒரு சொற் ருெடரை விட்டதையும் நினைவு வைத்திருந்தாரெனில் அது எத்தகைய அதிசயமான ஞாபகசக்தி?

-மாறுதல்வேண்டாதான் (ரா. கி): நவசக்தி 7.9.1927

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.