பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87

சென்னை கதீட்ரல் ரோடிலுள்ள திலகர் பவனத்தில் சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியார் வந்திருந்தார். அவர் தம் விருந்தினராக இருந்தார் மகாத்மா காந்தி அந்த இடத்தில் இப்போது கல் ஒன்று பதிக்கப் பட்டுளது. சென்னையில் சத்தியாக்கிரக சபை ஒன்று அமைத்தார் மகாத்மா. சத்தியாக்கிரக உடன்படிக்கை ஒன்று அவரால் விளக்கப்பட்டது. சத்தியாக்கிரகியாக விரும்புவோர் கையெழுத்திடலாம் என்றார் மகாத்மா. பலர் கையெழுத்திட்டனர். திரு. வி. கவும் சத்தியாக் கிரக உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்; சத்தியாக் கிரகியானுர்.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு, ஏப்ரல ஆருந்தேதி, ஞாயிற்றுக் கிழமை சத்தியாக்கிரக காளாகக் கொண்டாடல் வேண்டும் என்று அறிக்கை விடுத்தார் மகாத்மா. அத்திருகாளைக் கொண்டாட வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளப்

படடபின்,

சென்னை நகரம் பல வட்டங்களாகப் பிரிக்கப் பட்டது. இராயப் பேட்டை வட்டத்தின் பொறுப்பு திரு. வி. க. விடம் ஒப்படைக்கப் பட்டது. சத்தியாக் கிரக நாளைப் பெரும் அளவில் கொண்டாடுதற்குப் பாடுபட்டார் திரு. வி. க.

தொடர்ந்து நடைபெற்றது ஜாலியன் வாலா பாக் படுகொலை, அப்படுகொலையைக் கண்டித்துச் சென்னை யில் கூட்டங்கள் பல கடந்தன. அக்கூட்டங்கள் பெரிதும் சுப்பிரமணிய சிவாவினுல் கூட்டப் பட்டன. அக்கூட்டங்களில் பேசினர் திரு. வி. க. டையரின் அரக்கச் செயலையும் ஒட்வியரின் மற ஆட்சியையும்