பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88

கனடித்தார். இவற்றிற் கெல்லாம் இடம் தந்த இராஜப் பிரதிநிதி செம்ஸ்பர்டைத் திரும்ப அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு, டிசம்பர்மாதம் பதினேழாந்தேதி, லோகமான்ய பால கங்காதர திலகர் சென்னை கண்ணினர். திலகரைக் காணத் தேசபக்தர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. சுப்பராய காமத், திரு. வி. க. ஆகிய மூவரும் சென்றனர்.

திலகர் பெருமான் ஏழை பங்காளர். அவர் செல்வர் வீடுகளில் தங்கலாகாது. ஏழைகள் வீட்டி லேயே தங்க வேண்டும் என்று வேண்டுதல் விடுத்தார் திரு. வி. க. அவர்தம் வேண்டுதலுக்கு இணங்கினர் திலகர்.

•தேசபக்தன்’ காரியதரிசி சுப்பராய காமத் வீட்டில் மூன்று நாள் தங்கியிருந்தார். அந்த மூன்று காளும் திலகருடன் நெருங்கிப் பழகி அளவளாவினர் திரு. வி. க.

புனுவுக்கு வாருங்கள்’ என்று திரு. வி. க.வை அழைத்தார் திலகர். ஆணுல் அந்த எண்ணம் ஈடேரு மலே போய் விட்டது.

1920ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தேதி திலகர் பெருமான் விண்ணுலகு ஏகினர். அப்போது திரு. வி. க. தேசபக்தன் ஆசிரியபீடத்தில் இல்லை.

பின்னே ஒத்துழையாமைப் போர் தொடங்கியது. அதில் பெரும் அளவு ஈடுபட்டார் திரு.வி.க. பல்லாயிரம் மக்கட்குச் சிறை வாழ்வு கிட்டியது. ஆனல் திரு. வி. க வுக்கு அவ்வாழ்வு கிட்டவில்லை. காரணம் சென்னை