பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7

ஒரு நாற்காலியில் அமரச் சொன்னர். தாம் மற்றாெரு நாற்காலியில் அமர்ந்தார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து ஆரும் ஆண்டு சூன் மாதத்திலே திரு. வி. கவின் உதவியாசிரியணுக வேலை தொடங்கினேன். அன்று முதல் அவரது இறுதி வரை நான் வேறு எங்கும் வேலை தேடிச் சென்றேன் அல்லன். ஒராண்டா? இரண்டு ஆண்டுகளா? இல்லை. பதினறு ஆண்டுகள் அவருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்றேன். :தந்தையினும் களிகூரத் தழுவினன் தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்’ என்பது கம்பர் வாக்கு. திரு. வி. க. என்னைத் தந்தையினும் களிகூரத்தழுவினர்’ உண்மை; வெற்றுரையன்று.

என்னைக் காணுங்கால் அவர் முகம் மலரும்; முகத்தில் நகை அரும்பும். மகிழ்ச்சி பொங்கும். இனிய சொல் பகர்வார். அன்புடன் உரையாடுவார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து எட்டாம் ஆண்டு அக்டோபர் மாதத்திலே உலகநாத முதலியார் அவர்களின் அருமை மகன் இவ்வுலகு நீத்தான். அதுபோது நவ சக்தி'யிலே தலையங்கம் ஒன்று வெளியிட்டார் திரு.வி.க. ஒரு குலத்துக்கு ஒரு மைந்தன்’ என்ற தலைப்புடன் அத் தலையங்கக் கட்டுரை வெளிவந்தது. அதிலே அவர் குறிப்

  • எங்கள் குலத்துக்கு ஒரு மைந்தனய் பின்னாளில் நவ சக்தியை அன்புடனேற்றுத் தொண்டாற்ற வல்லய்ை அதற் குரிய கல்வி அறிவு திறமை முதலியன வாய்க்கப் பெற்ற வய்ை, எனக்கினியனுய்ச் செங்குருத்தென வளர்ந்து வந்த எனது கண்மணி பாலசுப்பிரமணியன் சென்ற செவ்வாய்க் கிழமை இரவு 11 மணிக்கு இவ்வுலக வாழ்வு நீத்ததை நேயர் கட்கு ஆருத்துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்குப் பத்தாண்டுக்கு முன்னர் என் மனைவி மக்களை
  • தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு.