பக்கம்:திரு. வி. க.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தொண்டு

முன்னுரை

கல்கி நினைவுச் சொற்பொழிவு வரிசையில் நிகழும் பணி இதுவாகும். தமிழ் இலக்கிய உலகில் தமக்கென ஒரு தனி இடத்தைத் தேடிக்கொண்ட பெருமையுடையவர் பேராசிரியர் கல்கியாவார். தெளிவான நடைச் சிறப்புடன் எத்தகைய ஆழ்ந்த கருத்தையும் மிக எளிய நடையில் விளக்கும் திறம்பெற்றுத் திகழ்ந்தார் அவர். அவருடைய காலத்திற்கு முன்னர் இவ்வளவு தெளிந்த தமிழ் நடையைக் காண்பது அரிதுதான். அவ்வாறானால் கல்கியின் இந்த நடைக்கு மூலம் யார்? தமிழ் முனிவர் என்று போற்றிப் புகழப்பெறும் திரு. வி.க.வே அந்த மூலம் என்றால் தவறில்லை. திரு. வி.க. என்ற ஊற்றுக் காலிலிருந்து தெளிந்த தமிழ்நடை என்ற யாறு பல கால்களாக ஓடியது. அக் கால்களுள் ஒருவரே கல்கியாவார். நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளர்களைத் தோற்றுவித்த பெருமையுடையவர் தமிழ் முனிவர். கல்கியின் நினைவாக நடைபெறும் இச் சொற்பொழிவுத் தொடரில் திரு வி.க.வின் தமிழ்த் தொண்டு பற்றியும் ஒர் உரை நிகழ்கிறது என்றால், அவ் உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/11&oldid=695395" இலிருந்து மீள்விக்கப்பட்டது