பக்கம்:திரு. வி. க.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அச. ஞானசம்பந்தன்

மக்களுக்குத் தொண்டு செய்வதையே பெரும் பேறாகக் கருதினர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற பெருமக்கள் இறைவனைப் புறக்கண்ணாலும் கண்டு வழிபடும் பேறு பெற்ற சீவன் முத்தர்கள்தாம். என்றாலும், மக்கள் துயரைக் கண்டு அவர்கள் வாளா இருந்து விடவில்லை. இது இறைவனுடைய திருவருள் என்று கூறி அப்பாற் சென்று விடவில்லை.

திருமருகல் என்ற ஊரில் ஒரு வணிகப் பெண் தன் காதலனை அரவு தீண்டிவிட்டமையின் அழுது புலம்பு கிறாள். அவள் புலம்பலைக் காதாற் கேட்ட ஆளுடைய பிள்ளையார் அவள் துயர் துடைத்தற்பொருட்டு அவ்வணி கனை உயிர் பிழைக்கச் செய்கின்றார். ஆளுடைய பிள்ளை யும், அரசும் திருவீழிமழலையில் தங்கியிருந்தபொழுது அவ்வூரில் பஞ்சம் தலைவிரித்தாடிற்று. அப்பெருமக்கள் இருவரும் ஊர்ஊராகச் சென்று இறைவன் புகழ் பாடும் பணியை விட்டுவிட்டு அங்கேயே தங்கித் தத்தம் மடத்தில் பஞ்சத்தால் அவதியுற்றவர்கட்குச் சோறு போடும் தொண்டை மேற்கொண்டனர். பஞ்சந் தீர்ந்த பிறகே தம் யாத்திரையை மேற்கொண்டனர். இவற்றை யெல்லாம் மனத்துட் கொண்டே திருமூலர்,

“படமாடுல் கோயில் பரமற்குஒன்று ஈ.யின் நடமாடுங் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா”

என்று கூறிப்போனார். அடியவர்கட்குச் செய்யுந் தொண்டே ஆண்டவனுக்குச் செய்யுந் தொண்டாகும் என்று சைவர் களும், பாகவதர்கட்குச் செய்யுந் தொண்டே பகவானுக்குச் செய்யுந் தொண்டாகும் என்று வைணவர்களும் கூறி யுள்ளார்கள். ஆதலின், இப் பெருமக்கள் மக்கள் தொண்டை எத்துணைத் தூரம் போற்றினர் எந்பது வெளிப்படை இதுபற்றிப் பேசவந்த பெரியார் திரு.வி.க. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நூலில் கீழ்வருமாறு பேசுகிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/110&oldid=695396" இலிருந்து மீள்விக்கப்பட்டது