பக்கம்:திரு. வி. க.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 11

எனவே, வரலாற்றறிவு பொதுவாக அனைவர்க்கும் சிறப்பாக அரசியல் தொண்டு செய்பவர்க்கும் தேவையாகின்றது.

அவர் அறிந்த வரலாறு

இந்த அடிப்படையில் தமிழக வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் திரு.வி.க. நன்கு அறிந்திருந்தார். தமிழக வரலாற்றை நன்கு அறிந்தார் என்பதை அவருடைய தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு என்ற நூலிலும் இந்திய வராற்றை நன்கு அறிந்திருந்தார் என்பதை அவருடைய இந்தியாவும் விடுதலையும் என்ற நூலிலும் நன்கு காணலாம்.

கூர்த்த மதி

‘இந்தியாவும் விடுதலையும் என்ற நூலின்கண் அவருடைய கூர்த்த மதியையும் இந்திய வரலாற்றை ஒரு தமிழ் மகன் என்ன கண்ணோட்டத்துடன் காண்கிறான்? என்பதையும் அறிய முடிகிறது. நூலின் முற்பகுதியாகிய இந்தியா என்ற பகுதியில் முற்கால இந்தியா, இடைக்கால இந்தியா, தற்கால இந்தியா என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. அவருடைய காலத்தே கிடைத்த சான்றுகள், ஆராய்ச்சி முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கண்ணோட்டம் அமைந்திருக்கிறது.

நூலின் உட்கிடக்கை

‘இந்திய நாடு தென்மையிற் சிறந்தது; வளர்ப்ப முடையது; வாழ்வுக்குரியது: அற வளர்ச்சிக்குத் தகுதி வாய்ந்தது. பின்னையது இந்தியாவின் சிறப்பியல்புகளுள் ஒன்று என்ற முறையில் நூல் தொடங்குகிறது. அற வளர்ச்சிக்குத் தகுதியானது என்று தொடங்கியதை விளக்கத் தொடங்கிக் கீழ் வருமாறு கூறுகின்றார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/121&oldid=695408" இலிருந்து மீள்விக்கப்பட்டது