பக்கம்:திரு. வி. க.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 117

கூட்டத்தாரின் பொய்ப் பிரச்சாரம். பொய்ப் பிரசாரத்துக்குச் செவிசாய்க்கும் அளவில் நின்றுவிடுவது தவறு. மார்க்கிஸத்தைத் துருவி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். பார்த்தால் அதன் முடிவு ஹிம்சையை அறிவுறுத்துகிறதா அல்லது அஹிம்சையை அறிவுறுத்துகிறதா என்பது புலனாகும். மார்க்ஸியத்தில் ஆங்காங்கே ஹிம்ஸை இருத்தல் உண்மை. அது தனி மனிதனை உளங்கொண்ட தன்று; அஹிம்ஸை முடிவைக் குறிக்கொண்டது. நமது இந்தியாவின் பண்டை அஹிம்ஸா தர்மத்தைப் புதுக்கவல்லது மார்க்ஸியம் என்பது எனது கொள்கை. மார்க்ஸியம், சுக்கிர நீதிசாணக்கியம்-உபநிறஷதம்-திருக்குறள் முதலியவற்றின் சாரம் படியப்பெற்று, இந்திய இயற்கைக்கேற்ற வண்ணம் இந்தியாவில் பரவினால், இந்தியா அஹிம்ஸா மயமாகும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.” பல்வேறு சமயம்

இந்த இந்திய நாடு அறம்வளர்தற்கு ஏற்ற சூழ்நிலை யுடையது என்பதைப் பெரியார் முன்னரே குறிப்பிட்டார். உலகிடைத் தோன்றிய பெருஞ் சமயங்களுள், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரண்டு மட்டுமே இந்திய எல்லைக்கு அப்பால் தோன்றின. ஏனைய, பெளத்த, சமணம் முதலான சமயங்களும் இந்து சமயமும் இம்மண்ணிடையேதான் தோன்றின. ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் அறத்தை அடிப்படையாகக் கொண்டு பேசுபவை. எனவே, பல்வேறு பெருஞ் சமயங்கள் பல்வேறு காலத்தில் தோன்ற இந்திய மண் இடந்தந்தாகலின் மார்க்கிலமும் ஏற்கக்கூடியதே எனப் பெரியார் கூறினார் என்க.

ஆரிய திராவிடக் கலப்பு . . -

முற்கால இந்தியா என்ற பகுதியின் தொடக்கத்தில் இந்தியாவில் வாழ்ந்து ஆதிக்குடிகள்பற்றி ஆய்கிறார். ஆரியர்

  • இந்தியாவும் விடுதலையும், பக்கம் 15,16
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/127&oldid=695414" இலிருந்து மீள்விக்கப்பட்டது