பக்கம்:திரு. வி. க.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இ. அ.ச. ஞானசம்பந்தன்

கொள்கைதானே என்று பலர் கருத இடமுண்டு. கிறிஸ்டியன் சோஷலிசத்திற்கும் திரு. வி. க.வின் சமதர்மத்திற்கும் ஒரளவு வேறுபாடுண்டு. கிறிஸ்டியன் சோஷலிசத்தில் தனி உடைமை முற்றிலும் தவிர்க்கப்படவில்லை. உடைமைக்காரன் அவ் வுடைமைக்குத் தர்மகர்த்தாவாகத் தன்னைப் பாவித்து வரவேண்டும் என்பதே அதன் அடிப்படை. இத்தகைய கொள்கை பழந்தமிழ் நாட்டிலும் இருந்ததுண்டு. செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே என்பது புறநாநூறு.

திரு.வி.க. அவர்கள் பொதுவுடைமையில் தனிச் சொத்துரிமை இல்லை. ஆனால், அதனை இல்லாமல் செய்வதற்கு வன்முறையை அவர் விரும்பவில்லை. அவர் கருத்தின்படி மனிதன் சமரச சன்மார்க்கத்தில் வாழத் தொடங்கினால் புளியம்பழத்தின் ஒடுவிட்டுப் போவதைப் போல அவனுடைய உடைமை ஆசை அவனைவிட்டு நீங்கும். இம்முறை நடைபெறக்கூடியதா அன்றா என்பது வினாவன்று.

சன்மார்க்க வாழ்வில் ஆசை நீக்கம்

மனிதன் சமயத்தைப் போர்வையாக அணியாமல் சமய வாழ்வை மேற்கொண்டால், இயற்கையிலும் உயிர் களிடத்திலும் இறைவனைக் கண்டு அன்பு செலுத்தக் கூடுமானால், எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து அன்புரிமை உடையவராய் வாழக் கூடுமானால், தனக்கென வாழாமல் பிறர்க்குரியாளனாக வாழக் கூடுமானால், சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் திரு.வி.க. அவர்கள் கண்ட சமரச சன்மார்க்கியாக அவன் வாழக் கூடுமானால் அந்த நிலையில் அவனிடம் தனி உடைமை உணர்வு நீங்கும். இத்தகைய மனப்பான்மை பெறுதற்காகவே அன்பு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பெரியார் அறிவுறுத்தினார். அடியார்கள், நாயன்மார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/132&oldid=695420" இலிருந்து மீள்விக்கப்பட்டது