பக்கம்:திரு. வி. க.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இ. அ.ச. ஞானசம்பந்தன்

உளத்திருத்தி, முற்கால இந்தியாவை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், அக்கால இந்தியாவின் ஒருமைப்பாடு புலனாகும்.

ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டை அறிவிக்குங் குறிகள் சில உண்டு. அவற்றுள் ஒன்று மொழி. முற்கால இந்தியா ஒரு மொழியைப் பெற்றிருந்ததா? இல்லையா? முற்கால இந்தியா தொடக்கத்தில் ஒரு மொழியைப் பெற்றிருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், அம் மொழி எது என்னும் ஆராய்ச்சி இன்னும் நிகழ்ந்து வருகிறது. இதுகாறும் நிகழ்ந்த ஆராய்ச்சி, முற்கால இந்தியாவின் தொடக்கத்தில் திராவிடம் நாட்டின் ஒரு மொழியாயிருந்தது என்றும், அதன் பெருக்குக் குறைந்த பின்னை அதனிடத்தில் ‘சமஸ்கிருதம் ஆட்சி பெற்றது என்றும் உணர்த்துகிறது. திராவிடமும் சமஸ்கிருதமும் தனித்தனி வேறுபட்ட மொழிகளா அல்லது ஒன்றன் சிதைவுகளா என்று ஒலிநூல் வல்ல அறிஞர் அவற்றை ஆராய்ந்து வருகின்றனர். இருமொழியும் பிராகிருதத்தின் சிதைவுகள் என்று சிலரால் கருதப்படுகின்றன. அஃது உறுதிப்படின், முற்கால இந்தியாவின் பொது மொழி பிராகிருதம் என்றே கோடல் வேண்டும். இப்பொழுது வட இந்தியாவில் பேசப்படும் பல மொழிகள் பிராகிருதத்தின் சிதைவுகள் என்று தெரிகிறது.

திராவிடத்தின் பழைய பெயர் தமிழ். தமிழ் ஒரு பகுதியில் தனித்து நின்றும்-மற்றப் பகுதிகளில் ஏராளமான வடமொழிக் கலப்பால் தெலுங்கு கன்னடம் மலையாளமாகத் திரிந்தும் போனபின்னரே அது பொதுவாகத் திராவிடம் என்ற பெயர் பெறலாயிற்று. திராவிடம் என்ற ஆட்சி பழந்தமிழ் நூல்களில் இல்லை. பிற்காலத் தமிழ் நூல்களிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/136&oldid=695424" இலிருந்து மீள்விக்கப்பட்டது