பக்கம்:திரு. வி. க.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஆ அச. ஞானசம்பந்தன்

உலகமாதல் ஏற்குமோ அறிகிலேன். யான் கற்ற அளவில்-கேட்ட அளவில்-இரண்டுஞ் சேர்ந்த ஆழ்ந்த சிந்தனையில் திரண்ட அநுபவத்தில்-ஆதி மது நெறியில் உற்ற இழுக்கைத் தர்மத்தால் போக்கி அந்நெறியைச் செம்மை செய்யப் போந்தவர் புத்தர் என்ற தோன்றுகிறது. எனக்கு இக் கருத்துத் தோன்றுமாறு துணை செய்த நூல்கள் சில, அவற்றுள் ஒன்று, பாபு பகவான்தாஸ் மதுதர்மத்தை ஆராய்ச்சி செய்து வெளியிட்ட நூலாகும். என்னுடைய ஊகம் தவறாகவுமிருக்கலாம், யான் அகக்கண் திறக்கப் பெற்றவனல்லன்.

மதுவின் பெயரால் பின்னை எத்துணையோ பேர் தோன்றியிருப்பர்; அவரால் எத்துணையோ சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். சிலர் திரு வள்ளுவர் பெயராலும் திருமூலர் பெயராலும் நூல்கள் எழுதியுள்ளனர். இவர்கள் நூல்களும் ஆதி திரு வள்ளுவராலும் ஆதி திருமூலராலுமே எழுதப்பட்டன, என்று பொல்லாத உலகம் கொண்டொழுகுகிறது. இஃது உலக இயல்புபோலும்! பழைய உண்மைகள் யாவும் உள்ளவாறே சரித்திர உலகில் படிகின்றன என்று கொள்ளுதலுங் கூடாது. சரித்திர காலத்தில் நடந்ததென்று சொல்லப்படும் கல்கத்தா இருட்டறை நிகழ்ச்சி இப்பொழுது சிலரால் மறுக்கப்படுகிறது; இன்னும் பல நிகழ்ச்சிகள் மறுக்கப்படுகின்றன. உண்மை ஆண்டவனுக்கும் அகக் கண்ணர்க்குமே தெரியும்.

ஆதிமது நெறியில் இரண்டு இயல் இருக்கின்றன. ஒன்று அறம்; மற்றொன்று அரசியல். இரண்டுஞ் சேர்ந்த ஒன்று மதுநெறி (மதுதத்துவம்) என்பது. சில சமயம் அரசியலினின்றும் அறம் ஒதுங்கி விடும். அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/140&oldid=695429" இலிருந்து மீள்விக்கப்பட்டது