பக்கம்:திரு. வி. க.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ 19|

தாள்களின் நோக்கம்

இத் தினத்தாள்கள் மக்கட்கு ஓரளவு அரசியல் அறிவை உண்டாக்க வேண்டும் என்று கருதியது உண்மைதான். ஆனால், அக் கருத்து நிறைவேற அவர்கள் மேற்கொண்ட வழிகள் சரியானவையல்ல. தாம் நேரே ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் அதனைப் பார்த்தவர்கள் உணர்ச்சி பெறமுடியும். ஆனால், தாம் பெற்ற உணர்ச்சிகளைப் பிறருக்கு அறிவிக்க வேண்டுமாயின் அதற்கு மொழியின் உதவி தேவை. எழுத்து மொழி, பேச்சு மொழி என்ற இரண்டினாலும் மட்டுமே உணர்ச்சியைத் துண்டிவிட முடியும். அன்றைய தினத்தாள்கள் அரசியலறிவை மக்கட்கு ஊட்ட இத்தகைய மணிப்பிரவாள நடையைக் கையாண் டதன் மூலம் தாம் விரும்பியதைச் செய்ய முடியவில்லை. ஆனால், நாளுக்கு நாள் அரசியல் விவகாரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் உந்தப் பெற்ற மக்கள் இத் தாள்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினர். திரு.வி.க.வைப் போலக் கனலைக் கக்கும் நடையில் எழுதவும் பேசவும் பெற்றாலொழிய உணர்ச்சியைத் துண்ட முடியாது.

புதிய நடை

எனவே, திரு.வி.க. அவர்கள் பத்திரிகையின் மூலம் மக்கள் மனத்தைக் கவரப் புதியதோர் தமிழ் நடையை மேற்கொண்டார். பத்திரிகைக்கு எழுதுவதற்காகவே தாம் அந்த நடையை மேற்கொண்டதாகவும் நாளா வட்டத்தில் அந்த நடையே தமக்கு உற்ற நடையாக அமைந்து விட்டதாகவும் வாழ்க்கைக் குறிப்பில் அவரே எழுதியுள்ளார். சிறு தொடர்கள்

அந்த நடையின் தனிச் சிறப்பு யாது? எந்த ஒரு சொல் தொடரும் இரண்டு வரிகளுக்குமேற் போகாமல் இருப்பது அதனுடைய தனியழகு நூறு தொடர்களை எடுத்துக் கொண்டால் எழுபத்தைந்து ஒரு வரிக்குமேல் நீள்வதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/201&oldid=695496" இலிருந்து மீள்விக்கப்பட்டது