பக்கம்:திரு. வி. க.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 அச. ஞானசம்பந்தன்

“அடியேன் அறியாமையுடையவன், அறியாமை யினின்றும் முழு விடுதலையடையும் பேறு எனக்குக் கிட்டுமோ அறிகிலேன். ஒரோவழி அவ்வப்போது நேருஞ் சிறுசிறு விடுதலையால் பெரியோர்தம் உள்ளத்தை உள்ளவாறு உணர்தல் அரிது. பெரியராகிய சேக்கிழாரை உள்ளவாறு உணர்தற்கு, அறியாமை ஒடுங்கி, நிலைத்த மெய்யுணர்வுச் சுடர் எழுதல் வேண்டும். இஃது இதுகாறும் பெற்ற ஆராய்ச்சி அநுபவங்களால் நன்கு தெரிகிறது. சேக்கிழார் பெருமான் தெய்வப் புலவர்; திருவருட் செல்வர்; அன்புக்கடல். அவர்தம் பெருமை அளப்பரிது. அவரைக் காண்டற்குத் தெய்வப் புலமை வேண்டும்; திருவருட் செல்வம் வேண்டும்; அன்பு வேண்டும். இவையில்லா ஒருவன் தெய்வச் சேக்கிழார் உள்ளத்தை எங்ஙனம் காண்டல் கூடும் ?”*

‘உலகெலாம் என்ற சொற்கள் இறைவனால் கூறப்பெற்றது என்று சேக்கிழாரே கூறியுள்ளார். இயற்கையின் சிறந்த இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பெரியார் ஒரு சிற்றாராய்ச்சி நடத்துகின்றார். அதன் முடிவில் பூத தத்துவச் சேட்டைகளினின்றும் விடுதலை பெற்ற பெரியார்கள். வானிழல் துணையைப் பெற்றுள் ளார்கள் என்றும், அயரா அன்பில் அரன்சுழல் போற்றித் தத்துவக் குறும்புகளினின்றும் விடுதலை பெற்றுச் சிதாகாசத் தொடர்புகொண்ட சேக்கிழார் பெருமான் மனத் தெளிவுபெற்ற சித்தராய் விட்டார். எனவே, ஆகாயத்தே தோன்றும் நுண் ஒலிகளைக் கேட்பது அவரைப் பொறுத்தமட்டில் புதுமையான தன்று என்ற புதிய கருத்தை வெளியிடுகிறார் பெரியார்.

“சேக்கிழார் பெருமான், சிவபத்தி சிவனடியார் பத்தியான் சீவகரணங்கள் எல்லாம் சிவகரணங்களாப்

திருத்தொண்டர் புராணம், பக்கம் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/214&oldid=695510" இலிருந்து மீள்விக்கப்பட்டது