பக்கம்:திரு. வி. க.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 : அச. ஞானசம்பந்தன்

இடம் ஏது? ஆகவே ஐந்தவித் தானை எல்லாங் கடந்த இறைவன் என்று சொல்லுதல் பொருந்தாதென்க.

ஐந்தவித்தான் இறைவனல்லனாயின், அவன் கடவுள் வாழ்த்தில் புகுந்திருத்தலென்னை என்னுங் கடா எழும். ஈண்டுக் கடவுளுக்குரிய மூன்று நிலையை உன்னின் உண்மை விளங்கும்.”*

இனி ஒழுக்கத்து நீத்தார் என்ற தொடரை ஆயத்

- தொடங்குகிறார் பெரியார். ஒழுக்கத்தில் நின்று அதன்

ப்யனாக மனமாசுகளை நீத்தார் எனப்பொருள் விரிக்கின் றார். அக் கருத்தை நிலைநாட்டப் பின்வருமாறு கூறுதல் ஆய்தற்குரியது:

“நீத்தார் என்பதற்கு உவகை நீத்தாரென்றும், பெண்ணை நீத்தாரென்றும் பொருள் கூறுவோரு முளர். அக் கூற்று ஈண்டைக்கு ஏலாது. உலக வாழ் வையும், பெண்ணோடு வாழ்தலையும் நீப்பது துறவு என்னுங் கொள்கை எப்படியோ மக்களிடை நுழைந்து கொண்டது. அது மன்பதையில் நுழைந்த நாள்தொட்டு ‘நீத்தல் என்றதும், உலகையும், பெண்ணையும் துறத்தல் என்பது பொதுமக்கள் கொள்ளலானார்கள். உலகையும் பெண்ணையுந் துறப்பது இயற்கை வாழ்வுக்கு அரண் செய்வதன்று. திருவள்ளுவர் அறிவுறுத்துவது இயற்கை வாழ்வு. இயற்கை வாழ்வை அறிவுறுத்தப் போந்தவர் உலகையும் பெண்ணையும் துறக்குமாறு ஒருப்போதுங்கூறார். ஆகவே திருவள்ளுவர் நூலிற் போந்துள்ள நீந்தல்-துறத்தல் என்னுஞ் சொற்களுக்கு மனமாசுகளை நீத்தல்துறத்தல் என்று பொருள் கொள்க.

- திருக்குறள் (பாயிரம்) விரிவுரை, பக்கம் 62, 63.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/232&oldid=695530" இலிருந்து மீள்விக்கப்பட்டது