பக்கம்:திரு. வி. க.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 இ. அ.ச. ஞானசம்பந்தன்

மொழிபெயர்ப்புத் தொண்டாகும். மொழிபெயர்ப்பு என்பது இற்றை நாளில் பெரிதும் போற்றி ஏற்றுக் கொள்ளப் பெற்றாலும், அது செம்மையான நிலையை அடைந்துள்ளது என்று கூறமுடியாது. இருமொழி வல்லார் பலர் உண்டு. ஆனால், மொழிபெயர்ப்புத் துறை இன்னும் தளர்நடைப் பருவத்திலேயே உள்ளது. அத் துறையில் யார் வேண்டு மானாலும் ஈடுபடலாம் என்ற தவறான ஒரு கருத்தும் பரவியுள்ளது. மொழி பெயர்ப்பு நூல் ஒன்றைப் படிக்கும்பொழுதே இது மொழிபெயர்ப்பு என்று கூறும்படி அமைந்துவிடுகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்வ தாயின் அதிலுள்ள கருத்தும், அதே உணர்ச்சியும் தமிழில் வெளியிடப்பட வேண்டுமே தவிர ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் ஒவ்வோர் தமிழ்ச் சொல் இருத்தல் வேண்டும் என்று நினைப்பது தவறு. அது சொற் பெயர்ப்பே தவிரத் தமிழாக்கம் அன்று. -

நம் பெரியாரவர்கள் மொழிபெயர்ப்புத் துறை நன்கு வளர்ச்சியடையாத 1925-30ஆம் ஆண்டுகளில், ஆங்கிலக் கருத்துகளைத் தமிழில் கூறல் முடியாது என்று பரவலாகப் பலரும் நம்பியே அந் நாளில் மிகச் சிறப்பான முறையில் தமிழாக்கஞ் செய்திருக்கிறார். காந்தியடிகளின் எழுத்து களைப் பெரும்பாலும் தமிழாக்கஞ் செய்துள்ளார். அடிக ளார் நடையழகும் பொருளாழமும் குன்றாமல் தமிழாக்கஞ் செய்திருப்பது அறிந்து மகிழற்குரியது.

25-9-1929ஆம் ஆண்டில் அடிகளாரின் யங் இந்தியா பத்திரிகையில் ஆங்கிலத்தில் அடிகள் வரைந்ததையும் அதன் தமிழாக்கத்தைத் திரு.வி.க. தம் பத்திரிகையில் தந்ததையும் கீழே காணலாம்:

“The news of Kohat set the smouldering mass aflame. Something had got to be done. I passed two nights

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/234&oldid=695532" இலிருந்து மீள்விக்கப்பட்டது