பக்கம்:திரு. வி. க.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இ அச. ஞானசம்பந்தன்

களினும் கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்; கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்லுவேன்’ என்று கூறிப்போனார்.

பயன்தரும் வழியாம் கல்வி

திரு. வி.க. போன்றவர்கள் கற்ற கல்வி மானிடமாகிய பயனைத் தந்த கல்வியாகும். மானிடமாவது யாது: ‘எவ்வுயி ரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் எவரோ அவரே மானிடத் தன்மை நிறைந்தவர் ஆவார். இப் பாடலைப் பாடியருளிய இராமலிங்க வள்ளலாரும் கல்வியுடன் மானிடத் தன்மை நிறைந்தவராகவே இருந்தார். இத்தன்மை நிறைந்தவர்கள் பிற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் சகியார்கள். பிற உயிர்கள் என்று குறிப்பிட்டுள்ளதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். பிற மக்கள் என்று கூறாமல் உயிர்கள் என்று கூறியது ஒரு காரணம் கருதியேயாகும். தம்மைப் போன்ற மக்கள் படும் துயரைப் போக்க முன் வருபவருள் பலர் உயிர் வருக்கத்துள் தாழ்ந்த படியில் இருக்கும் விலங்கு முதலியவற்றிடம் கருணை காட்டுவதில்லை. ஆனால், மானிடத் தன்மை மிக்குடையார் உயிர் வருக்கத்துள் வேற்றுமை பாராட்டுவதில்லை. ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை அனைத்தையும் ஒன்றாகவே கருதுபவர்கள் இவர்கள். மானிடத் தன்மை பெற்றிருப்பதற்கு இதுவே அடையாள மாகும். மனிதருள் தாழ்ந்த நிலையினனான குகன், அரக்கருள் ஒருவனாகிய வீடணன், விலங்குகளுள் ஒருவனாகிய சுக்ரீவன் ஆகிய மூவரையும் தன் சோதரர்களாக இராமபிரான் ஏற்றுக் கொண்டான். விலங்குகளின் இயல்பு மனித இயல்பினின்றும் வேறுபட்டது என்பதை நன்கு அறிந்திருந்தும் இராமபிரான் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். இலக்குவனிடம் சுக்கிரீவனைப் பற்றிப் பேசும்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/26&oldid=695541" இலிருந்து மீள்விக்கப்பட்டது