பக்கம்:திரு. வி. க.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இ. அச. ஞானசம்பந்தன்

விளைகிறதா? எற்றுக்கு ஒளிர்கிறீர்கள்? உங்கள் ஒளி இயற்கையா? செயற்கையா? உங்கட்குப் பகல் பகைமையா? வெண்திங்களே! நீ ஏன் ஓடிக் கொண்டே இருக்கிறாய்? ஏன் ஓரிடத்தில் நிற்ப தில்லை? உன் நிலவு இன்பம் ஊட்டுவதென்னை? அதை நீ எப்படி அடைந்தாய்: பகலில் அந் நிலவை ஏன் பொழிவதில்லை? பகலில் நீ இருக்கிறாயா? இல்லையா? எங்கே மறைந்து கொள்கிறாய்? இவ்வினாக்கள் எழுகின்றன. அவற்றை எண்ணி எண்ணிப் பார்ப்பேன். எப்படியோ பதில்கள் வரும்.

கடற்கரை நண்ணுவேன். கடற்காவியத்தைக் காண்பேன். கடலே! நீ ஏன் பரந்து விரிந்து கிடக்கிறாய்? ஏன் ஆழியாய் இருக்கிறாய்? உன்னை அடைந்தால் ஏன் விழுங்குகிறாய்? உன் தரங்கம் ஏன் பாடுகிறது? நீ ஏன் உப்பை வைத்திருக்கிறாய்? கோடிக் கணக்கான உயிர்களை ஏன் அடக்கி நிறகிறாய்? அவை மூச்சு விடுகின்றனவா? அவை ஒளி, காற்றுப்

பெறுகின்றனவா? நீ பூமியினும் பெரிதா யிருப்பதென்னை? அதை விழுங்கவா? நீ நிலமா யிருந்தது உண்மையா? உண்மையானால் ஏன்

நீரானாய்? மீண்டும் நிலமாவையோ? உன்னருகே உலவினால் உடலில் மரம் ஏறுவதென்னை? உன்னிடத் தில் என்ன மருந்திருக்கிறது? இவற்றைக் கடல் கேட்டு முறை முறையே இறை இறுக்கும்.

வயல் வழியே செல்வேன். வெள்ளைக் கோவணம் அணிந்து வெள்ளைக் குட்டையைத் தலையில் சுற்றி உழவர்கள் பணி செய்வது கருத்தை ஈர்க்கும். அவர்களது விஞ்ஞானம் எனக்கு உதயமாகும். பல நிறப் பூக்கள் நகைபுரிந்து தங்கள் வரலாறுகளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/36&oldid=695552" இலிருந்து மீள்விக்கப்பட்டது