பக்கம்:திரு. வி. க.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 73

வரம்புக்குட்பட்டு நிற்றலாகும். ஆங்கிலத்தில் உரிமை (liberty) என்றும் கட்டற்ற ஊதாரித்தனம் (licentiousness) என்றும் இரண்டு உண்டு. புலன்களைக் கட்டுப்படுத்திச் செம்மை யான வழியில் செல்லுமாறு செய்வதே புலனடக்கம். புலன் நாம் செலுத்தும்வழிச் செல்லுதல் வேண்டுமே தவிர அவை செலுத்தும்வழி நாம் செல்லுதல் தகாது. இது குறித்துப் பெரியார் கூறும் விளக்கம் போற்றி ஏற்றுக் கொள்ளற் குரியது.

“இயற்கையுடன் உறவு கொண்டு, புறத்தையும் அகத்தையும் ஒன்றச் செய்து, உயிர்கட்கு இன்ப மூட்டப் படைப்பில் அமைந்துள்ள புலன்களை அவா என்னும் பேய்க்கும், மற்றும் பல செயற்கை நரகத் துறைகட்கும் அடிமைப்படுத்தல் இயற்கையையும் அதன் உள்ளுறையாம் முருகையும் மறப்பதாகும். இம் மறப்புள்ள மட்டுந் துன்பம் நீங்காது.”* பெரியோர்கள் புலன்களைக் கள்ளர் என்றும் வஞ்சகர் என்றும் ஏசுவது அப்புலன்கள் அவா முதலியவற்றிற்கு அடிமையாகும்போது அவற்றைத் திருத்தி நல்வழிப் படுத்தல் வேண்டும் என்ற எண்ணத்திலேயேயாகும். . - மனத்தை ஒருநிலைப்படுத்தவும் இப் புலன்களே உதவு கின்றன. தொடக்கத்தில் எந்த ஒரு பழக்கமும் தொல்லை தரத்தான் செய்யும். அத் தொல்லையைப் பொறுத்துக் கொண்டு புலன்களை இயற்கைவழி திருப்பி விடின். அவ் வியற்கையின் உள்ளுறையாய் நிற்கும் முருகு அப்புலன்களை தன் வயப்படுத்தி நன்னெறியிற் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். வழிபாடு யாது?

சமயத்தை இயற்கையின் அடிப்படையில் கண்ட நம் பெரியார் இதனையடுத்து அந்த சமயத்துடன் நெருங்கிய

முருகன் அல்லது அழகு, பக்கம் 39.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/83&oldid=695604" இலிருந்து மீள்விக்கப்பட்டது