பக்கம்:திரு. வி. க.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 83

காண்க) ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு சமயப் பொருளாக விளங்குவது. முப்பத்தாறையும் பொரு ளாக் கொண்ட மெய்கண்ட சாத்திரம் எத் தத்து வத்தை-எச் சமயத்தை ஒதுக்கல் கூடும்? எதைக் குறை கூறல் கூடும்? சைவ சித்தாந்தம் தனித்தும், எல்லாச் சமயங்களிலும் ஊடுருவிப் பாய்ந்தும் நிற்பது. எல்லாச் சமயங்களிளுஞ் சேர்ந்த ஒன்றே சைவ சித்தாந்த மென்றுங் கூறலாம். சைவ சித்தாந்தம் யானை கண்ட குருடர் பிணக்கைப் போக்கிய ஒருவனை யொத்திருக் கிறது. சைவ சித்தாந்தம் தனக்கு வேறாக ஒரு சமயம் இருக்கிறதென்று நினைக்க இடம் தரவில்லை. சைவ சித்தாந்திகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுஞ் சிலர்பால் வேற்றுமை யுணர்விருக்கலாம். ஆனால், சைவ சித்தாந்தத்தில் வேற்றுமைக்கிடமில்லை.”*

சைவ சித்தாந்தவழி நின்று மாயைபற்றியும் உயிர் பற்றியும் ஆராய்கின்றார் பெரியார். சைவ சமயத்தின் ஆணி வேராயுள்ள பதினான்கு சாத்திரங்களையும் கொழுந்தாக வுள்ள தேவார திருவாசக.அருட்பாடல்களையுங் கொண்டே பெரியார் இவ்வாராய்ச்சியை நடத்தியுள்ளார். சைவத்தின் சமரசம் என்ற நூலில் இதன் விரிவைக் கண்டு கொள்ள வேண்டுகிறேன்.

சமரசப் பகை யாது?

இவ்வாராய்ச்சியின் முடிவில் ஏனைய சைவ சித்தாந்தி களைப் போல் அல்லாமல் எல்லாச் சமயங்களையும் ஏற்றுக் கொண்டு சமரசம் பேசும் நிலை சைவ சமயத்திற்கு உண்டு என்ற முடிவிற்கு வருகிறார் பெரியார், இப்பெரியார் கண்ட சமரசத்தைப்பற்றி அறியுமுன்னர் அச் சமரச அறிவு கை

சைவத்தின் சமரசம், பக்கம், 35-37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/93&oldid=695615" இலிருந்து மீள்விக்கப்பட்டது