பக்கம்:திரு அம்மானை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாலைக்கு அப்பால் 95 பாகத்தில் கொண்டிருப்பவனும், தென்னட்டை உடைய வனும், திருப்பெருந்துறையில் வாழ்பவனும், வேறு எதனையும் நாடாமல் தன் திருவடியையே தியானித்து அடைந்த மெய்யன்பர்களுடைய உள்ளத்தை உருகச் செய்யும் தன்மையை உடையவனும், அந்தப் பாண்டி காட்டைத் தான் என்றும் எழுந்தருளியிருக்கும் சிவலோக மாக ஆக்கு வித்தவனும், கங்கை நீர் தங்கிய சடாபாரத்தை உடையவனும், ஆனந்தமே உருவான நீண்ட திருவடிக்கே தம்மை அடைக்க்லமாக ஒப்படைத்த உள்ளமுடைய அன் பர்கள் உள்ளுக்குள் என்றும் சலனமின்றித் தங்குபவனும், தாரமான பொருளுக்கும் எட்டாத நெடுந் தூரத்தில் உள்ளவனும் ஆகிய சிவபெருமானப் பாடி அம்மானே ஆடுவோமாக." - (செப்பு-தங்கச் செப்பு தந்தச் செப்பும் ஆம் ஆர்: உவமஉருபு. செப்பு-அடியார் செப்பும் புகழ் எனலும் ஆம். கிராத் வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை' என்றும், > "இணங்கு கொங்கை மங்கை' - - என்றும் இவர் அதற்குப் புகழ் பாடுவார். பிற அருளா ளர்களும், - : * -- 'தளிரீள வளர்முலை' - என்று பாடினர். இவ்வாறு புகழைக் கொண்டதாதலின், செப்பு என்பதற்கு அடியார்கள் புகழும் புகழ் என்று பொருள் கொள்வதும் பொருந்தும். - தென்னன்.தென்னட்டையுடையவன். தென்னனப் பாண்டியளுக்கி அவனுக்குரிய பெருந்துறை என்பதும் ஒன்று. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/109&oldid=894707" இலிருந்து மீள்விக்கப்பட்டது