பக்கம்:திரு அம்மானை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - திரு அம்மானே தப்பாமே தாளடைந்தார் என்று அடியாரின் திற. மாகவும், தப்பாமே நெஞ்சுருக்கும் என்று. எம்பெருமரன் திறமாகவும் இரு வேறு வகையிலும் பொருள் கொள்ள லாம். - , ' அடியார் தன் தாளைப் பிடித்தால் அவர் நெஞ்சைப் பிடித்துக் குடியேறுகிறவன் அவன்; அங்கே சென்று பொன்னே உருக்கி மாசறச் செய்து முத்திரை வைப்பது போலத் தன் அருள் முத்திரையை வைப்பவன். தான் புகும். நெஞ்சைச் சிவமாக்குவது போலத் தான் புகுந்து வாழும் நாட்டையே சிவலோகம் ஆக்குபவன். அவன் தண்மை நிரம்பியவன்; தண்மை நிரம்பிய கங்கையைத் தலையிற் குடி யவன்; அகங்காரத்தால் குழம்பியிருந்த கங்கையைத் தன் திருமுடியில் தேக்கித் தெளிவு பெறவும் பிறருக்குப் பயன் படவும் செய்தவன். ஆனந்த வார் கழல்-ஆனந்தமே வடிவான மீண்ட கழல்; கழல்-வீரகண்டை, இங்கே திருவடிக்காயிற்று; தானியாகு பெயர். கழலே-கழலுக்கே. ஒப்பாக-அடைக்கலமாக. உள்ளத்தை ஒப்புவித்தால் ஏனேக் கரணங்களும் அவ னுக்கு ஆட்படும், “மனத்துக்கண் மாசில தைல் அனைத் தறன்” (குறள்) ஆதலின். உள் இருக்கும்.அந்தரங்கத் தைத் தன் நிலையான இடமாகக் கொண்டு சலனமின்றிச் சிங்காதனத்தில் அமர்த்திருக்கும்ாப்போல வாழும். அப் பாலக்கு: ஐ, சாரியை. அப்பாலே: ஐ, இரண்டாம் வேற்று மை உருபு.காண்: அசை.) - - இறைவன் பிறருக்கு அரியவனக் இருப்பினும் அன்பர் களுக்கு எளியவன் என்பது கருத்து. இது திருவம்மானையில் 11-ஆவது திருப்பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/110&oldid=894711" இலிருந்து மீள்விக்கப்பட்டது