பக்கம்:திரு அம்மானை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi மாலைகளைப் போல மலர்கள் மலரும் பொழில்புடைசூழ்ந்தது அந்தத் தலம். . பாண்டி நாட்டை, தண்ணுர் தமிழளிக்கும் தண்பாண்டி. நாடு’ என்றும், தென்பாண்டி நாடு என்றும் சொல்கிரு.ர். அதைத் தன் திருவிளையாடல்களாலும் கருணையினலும் இறைவன் சிவலோகமாகவே ஆக்குவித்தானம். பாண்டி. நாட்டில் உள்ள மதுரையை ஆரவாரம் மிக்கமையால் கலிமதுரை என்கிரு.ர். சோழ நாட்டில் உள்ள தில்நைகர்புக்குத் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் மன்னியிருக்கிருன், திருவையாற்றில் அமர்ந்திருக்கிருன். திருவானைக்காவில் கோயில் கொண்டுள்ளான். அண்ணுமலையிலும் விளங்கு. கிருன். . - இறைவனப் பல திருநாமங்களைச் சொல்லிப் புகழ். கிரு.ர். அங்கணன், அந்தணன், அப்பன், அம்மான் ஆள்வான், ஈசன், என் ஆனே, கடவுள், கோன், சிவன், சேவகன் என்றும், தத்துவன், தாயானவன், தென்னன் என்றும் சொல்கிருர், நாயகன், பிஞ்ஞகன், பெம்மான், பேராளன் என்றும், மைAp யான், மன்னன், மாதிருக்கும் பாதியன் என்றும், வித்தகன், வேதியன் என்றும் குறிக்கிரு.ர். - . . . . சில அருஞ்சொற்களை ஆளுகிருர். பிறவியைப் பிறவு என்றும், மன்னன் என்பதை மன்னன் என்றும், தொடர்பு என்பதைத் தொடர்வு என்றும் சொல்கிரு.ர். . மணிவாசகருடைய அன்பும், உருகும் தன்மையும்,. ஆனந்த அதுபவத்தால் உண்டான வியப்பும் இந்த இருபது பாடல்களிலும் விரவி நிற்கின்றன. திருவாசகத்தில் எந்தப் பகுதியிலும் இத்தகைய இயல்புகளைக்காணலாம். வெல்லப் பிள்ளையர்ரில் இனிக்காத பகுதி எது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/13&oldid=894752" இலிருந்து மீள்விக்கப்பட்டது