பக்கம்:திரு அம்மானை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X அந்தணய்ை வந்து அறை கூவி வீடருளிளுைம். பூதலத்தே போந்தருளிப் பிறப்பறுத்து ஆட்கொண்டான். அவர் கண் காண எளியனாக வந்து தன்னையே நாடும் பித்தை உண் டாக்கி மீட்டும் இவ்வுலகுக்கு வாரா வழியை அருளினன். அந்த வழி வானேர் அறியா வழி. ஆனையாய்ப் புழுவாய் மனிதனுய்த் தேவனுய்ப் பல பிறவிகளை எடுத்து இளைத்த அவரை ஆட்கொண்டு, ஊனை உருக்கி, வினைகளை ஒட்டி, தேனையும் பாலையும் கன்னலையும் போல இனிமை தந்து, தன் தொழும்பில் ஈடுபடுத்தின்ை இறைவன். ஊய்ை உயிராய் உணர்வாய்க் கலந்தான். திருப்பெருந்துறைக்கு வந்து காத்திருந்து, அவரைக் கண்டு இரங்கி, பெருங் கருணையால் அவர் உள்ளே ஒளி திகழும்படி செய்து தண்ணளி வழங் .கின்ை. * - இறைவன் தாய்போலத் தலையளி செய்து உடம்புக்குள் புகுந்து உரோமங்கள் சிலிர்ப்பெய்த, கல்லைப் பிசைந்து கனியாக்குவது போல அவரைப் பக்குவப்படுத்தி ஆனந்த வெள்ளத்தில் அழுத்தின்ை; வினைகளைக் கடிந்தான்; தாள் தாமரையைக் காட்டித் தன் கருணைத்தேன் காட்டினன். அவர் பிச்சேறி நிற்றலை நாட்டினர் கண்டு நகையாட, அவர் யாவற்றுக்கும் மேலான வீட்டின்பத்தை அடையும்படி செய்தான்; அந்தமிலா ஆனந்தத்தை வழங்கினன். - அவருக்காக இறைவன் குதிரையின்மேல் ஏறி வந்து, மண் சுமந்து கூலி கொண்டு, பாண்டியல்ை அடிபட்டுப் புண் சுமந்தான். + - அவன் எழுந்தருளியிருக்கும் தலங்களைச் சொல்கிருர், தம்மை ஆட்கொண்டருளிய திருப்பெருந்துறையைப் பன் னிரண்டு இடங்களில் எடுத்துரைக்கிருர். அது பாண்டியனது ஆட்சிக்குள் இருந்தமையால் தென்னன் பெருந்துறை என் கிருர். மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் சிறப்புக்களை உடைமையால் அது சீரார் பெருந்துறையாகிறது.அேன்பர்கள் வந்து போற்றிப் பேணும் திருத்தலம் அது. அங்கே மதிவில் . ஒவியங்களைத் தீட்டியிருக்கிரு.ர்கள் கொத்துக் கொத்தாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/12&oldid=894729" இலிருந்து மீள்விக்கப்பட்டது