பக்கம்:திரு அம்மானை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix இவ்வாறு அருமை உடையவனாக இருந்தாலும் மெய்” யன்பு உடையவர்களுக்கு எளியவன். அவர்களுக்கு மெய்ப் பொருளாகத் தோற்றுவான். அவர்கள் குற்றங்களை நீக்கிக். குணம் கொண்டு கோதாட்டுவான்; அவர்களுடைய சுற்றத் தொடர்பை அறுப்பான்; பாசத்தைப் பற்ருமற் செய்து: அவர்களைத் தான் சென்று பற்றுவான்; பற்றறச் செய்து பேரானந்தத்தை வழங்குவான். பழ அடியார்களுக்கு அந்த மிலா ஆனந்தத்தை ஈந்தருள்வான். நெஞ்சை உருக்கி அவ ருள்ளே இருப்பான். அவர்களுக்குத் தேளுகவும் அமுதாகவும்: இனிப்பவன் அவன். அன்பர்கள் ஓயாமல் அவனை நினைந்து உருகுவார்கள்: அவன் திருவடியே சரணமென்று புகுவார்கள்; எல்லா வற்றையும் அவன் திருவடிக்கே அர்ப்பணம் செய்வார்கள்; தம்மை அவனுக்கே புகலாக ஒப்புவிப்பார்கள்: "என் ஆன என் அப்பன்' என்று போற்றுவார்கள். மாணிக்கவாசகர் சன்மார்க்க நெறியில் நின்று இறை. வனையே நாயகனுகக் கொண்டு காதல் புரிந்தவர். உடனி ருக்கும் அன்பர்களேத் தோழியாக்கிப் பாடுகிரு.ர். இறைவன் அணியும் கொன்றையை இந்த நாயகியார் சூடுகிருர் . அவனுடைய திருத்தோளேக் கூடுகிருர், முயங்கி மயங்கி நிற்கிருர், அவன் சிறிது புறக்கணிப்பது போலத் தோற். றில்ை ஊடுகிருர். அவனுடைய திருவாய் மொழிக்கும் இதழுறலுக்கும். ஏங்கி நிற்கிருர். உள்ளுருகித் தேடுகிருர், அவன் கழலையே சிந்திக்கிருர், பாடுகிரு.ர். அவன் அருள் பெற்று மலர்ச்சி பெறுகிருர், நம் கை வளை சிலம்பவும். காதில் உள்ள குழைகள் ஆடவும் குழல் புரளவும் தேன் பாயவும் வண்டு ஒலிப்பவும் அவனைப் பாடுவோம்' என்று: தோழியரிடம் சொல்கிரு.ர். சிவபெருமான் இந்த நிலவுலகத்துக்கு எழுந்தருளிக். குருநாதனுகக் கோலங்காட்டி மணிவாசகரை ஆட்ெ டான். அந்தப் பரிசையெல்லாம் அவர் பாராட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/11&oldid=894709" இலிருந்து மீள்விக்கப்பட்டது