பக்கம்:திரு அம்மானை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii மேல் ஊர்ந்து வருபவன்; அது வேகமாக நடப்பது. அழகிய குதிரையின் மேலும் எழுந்தருளி வருவான். அவனுடைய அனந்த கல்யாண குணங்களை எண்ணி இன்புறுகிருர். அவன் உயிர்களுக்கெல்லாம் தாய் போல நின்று அருள் பாலிப்பவன். கோளுகி நிற்பவன். அளவிறந்த பல்லுயிர்க்கும் மண்ணே ஆளும் மன்னவர்க்கும் மாட்சிமை யைத் தருபவன். தானே உலகேழும் ஆகி, எங்கும் செறிந் தவன். எப்பொருளுக்கும் ஆதாரமாய் இருப்பவன். எல்லாப் பொருளும் சென்று அடையும் இடமாக இலகுபவன். எல்லா உலகங்களுக்கும் கடவுளாக உள்ளவன். அண்டங்களுக் கெல்லாம் மூலப் பொருளாகிய முதல்வன். ஞானசொரூபி. மெய்ப் பொருள்களில் காட்சி தருபவன். அன்பர்க்கு மெய்" யணுகவும் அல்லர்தார்க்குப் பொய்யனாகவும் இருப்பவன். அப்பாலைக்குப் அப்பாலாக நிற்பவன். மும் மூர்த்திகளுக்கும் முன்னே இருப்பவன். எவை அழிந்தாலும் அழியாமல் நின்று. நிலைப்பவன். அன்பர்களுக்குத் தெளிந்த தேனப் போலவும். இனிய அமுதத்தைப் போலவும் இருப்பவன். அவனுடைய சிறந்த பெற்றிகள் வேறு யாரிடமும் காண முடியாதவை. அவன் அனலேந்தி ஆடுகிருன். கடலில் வலைவீசி மீன் பிடிக்கும் திருவிளையாடலைச் செய்தவன் அவன். தக்கன் செய்த யாகத்தில் சந்திரனைத் தேய்த்து, இந்திரன் தோள் களே நெரித்து, தக்கன் தலையை அரிந்து, கதிரவன் பல்லேத். தகர்த்துச் சிந்தி, தேவர்களை ஒடச் செய்தவன். ... • அவன் இந்திரனும் பிரமனும் திருமாலும் காணுவதற்கு. அரியவன். பாரிலுள்ளார், வானில் உள்ளார், பாதாளத்தி' லுள்ளார், வேறு இடங்களில் இருப்பவர் யாராலும் காண் டற்கு அரியான். இந்திரன் முதலியோர் காட்டில் மெய்" இளைக்கத் தவம் செய்வார்கள்; பல பிறவிகளை எடுப்பார்கள். காமியத்தவம் செய்பவர்களாதலின் அவர்களால் அவனைக் காண முடிவதில்லை. அவன் தேவர்களுக்கெல்லாம் மேலான தேவகை இருப்பவன். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/10&oldid=894684" இலிருந்து மீள்விக்கப்பட்டது