பக்கம்:திரு அம்மானை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறைத் தொகுப்பு திருவம்மானையில் இறைவனுடைய கோலத்தையும் இயல்புகளையும் அவன் எழுந்தருளியிருக்கும் சில தலங் களேயும் அடியார்களின் இயல்பையும் அவர்கள் இறைவன் திருவருளால் பெறும் அதுபவத்தையும் மாணிக்கவாசகருக்கு இறைவன் திருவருள் புரிந்ததையும் காணலாம். சிவபெருமான் தன் திருவடியில் கழலை அணிந்திருக் கிருன். திருவடியே கருணையைப் பில்குகிறது. அது மிக்க பெருமையை உடையது; தாமரை போலக் கண்ணுக்கு நிரம்பிய எழிலுடன் விளங்குவது; பொலிவு பெற்றது: செக்கச் சிவந்தது. அவன் யாரையும் அஞ்சலித் தறியாத வளுகையால் அவன் கைகள் சேர்ந்தறியாதவை. அவன் செய்ய வாயை உடையவன், திருமார்பில் முப்புரி நூல் அணிந்துள்ளான். தோள் நிரம்ப வெள்ளைத் திருநீற்றைப் பூசியிருக்கிறன். திருமுடியின்மேல் துண்டமாகிய பிறை விளங்குகிறது. மந்தார மாலையையும் கொன்றையையும் அவன் அணிந்திருக்கிருன். கொன்றைமாலையில் தேன் நிரம்பியுள்ளது. அவன் திருமேனி செம்பொன்னைப் போல ஒளி வீசுவது. அதனல் அவனைச் செய்யான் என்கிருர். அவன் கரிய திருக்கழுத்தை உடையவன். துதலில் கண்ணையுடைய தனிச் சிறப்பைப்பெற்றவன். தன் சடாபாரத்தில் கங்கையை வைத்திருக்கிருன். பின்னிய சடையினல் பிஞ்ஞகன் என்ற திருநாமம் இறைவனுக்கு அமைந்தது. - அவனுடைய திருமேனியில் ஒரு பாதியில் அம்மை இருப்பதால் மாதிருக்கும் பாதியன், மாதியலும் பாதியன், பெண் ஆளும் பாகன், செப்பார் முலைபங்கன், கிளிவந்த மென்மொழியாள், கேழ்கிளரும் பாதியன், பெண் சுமந்த பாகத்தன் என்கிரு.ர். அவன் அநாதியாகவே வரும் தொல் புகழை உடையவன்; விண் சுமந்த கீர்த்தியை உடையவன்; .பண்நிறைந்த பாடல்களைப் பெற்றவன். அவன் விடையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/9&oldid=895013" இலிருந்து மீள்விக்கப்பட்டது