பக்கம்:திரு அம்மானை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi ஆழ்வதைவிட எழுதப் புகும்போது பின்னும் அதிகமாக ஆழ்ந்து சுவைக்கும் இயல்பு உண்டாகிறது. திருவம்மானையில் உள்ள இருபது பாடல்களையும் ಬಿ கால் ஒதிச் சிந்தித்து விளக்கம் கண்டதன் விளைவே இந்தப் புத்தகம். ஒவ்வொரு பாடலின் விளக்கத்தையும் தனித் தனியே தலைப்பிட்டுக் கட்டுரை வடிவில் எழுதியிருக் கிறேன். . அருணகிரிநாதர், அபிராமி பட்டர், மூவர் ஆகியோருடைய திருவாக்குகளில் ஈடுபட்டு, அவர்கள் திருப்பாடல்களுக்குரிய விளக்கக் கட்டுரைகளே எழுதிப் புத்தகமாக வெளியிடும் வாய்ப்பை முருகன் திருவருளும் என் ஆசிரியப் பெருமானகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்களின் ஆசியும் எனக்குக் கிடைக்கச் செய்தன. அந்த இரண்டையும் துணைக்கொண்டே இந்த விளக்கக் கட்டுரைகளையும் எழுதினேன். . - இந்த அருட்பாடல்களின் ஆழத்தை நான் என்ன கண்டு விட்டேன் கல்வி கேள்வியும் அநுபவமும் உடைய வர்கள் இவற்றைச் சுருதி யுக்தி அநுபவங்களைக் கொண்டு விளக்கப் புகுந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்கும். தாமரை மலர்வதைக் கண்டும் அல்லிப் பூ மலராமல் இருப்ப தில்லை. அவ்வாறு என் புன்மதியால் அறிந்தவற்றை, அல்லிப்பூவாக இல்லாவிட்டாலும் தும்பைப் பூவாகவேனும் பெரியோர் மதிக்கட்டும் என்ற எண்ணமே இந்தப் புத்தகத்தை வெளியாக்கும் துணிவை உண்டாக்கியது. இதைத் தமிழுலகம் ஏற்கும் என்ற நம்புகிறேன். கோந்தமலை’ கி. வா. ஜகந்நாதன் சென்னை.28 } x- 26-7-1980

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/8&oldid=894989" இலிருந்து மீள்விக்கப்பட்டது