பக்கம்:திரு அம்மானை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v யிடாகிய பாடல்களே யாவரும் பாடமுடியாது. மணிவாசகர் அத்தகைய பாடல்களைப் பாடினர். அவை இறைவன் திரு வருளால் இந்தப் பிறவியிலே பேரின்ப அநுபவம் கிடைக் கும் என்பதைத் தெரிவிக்கும். - "அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்" என்று அந்த அநுபவத்தைக் கூறுகிருர் மணிவாசகர் அதல்ை அவருடைய திருவாக்கு ஒளியுடைய மணி வாக்காகத் திகழ்கிறது. தொட்ட தொட்ட இடமெல்லாம் அருள் மின்சாரத் தாக்கின் அதிர்ச்சியை அவர் திருவாக்கில் &ᎬfᎱöᏈTöüIᎢLᏝ , - - பலகாலும் திருவாசகத்தை ஓதி ஓதி ஓரளவில் இன்புறும் பேறு எளியேனுக்குக் கிடைத்தது. பாட்டிலே ஊன்றி ஆழ்ந்து கின்றேன். 'கிடைத்தற்கரிய அமுத நூல் ஒன்று தமிழருக்குக் கிடைத்திருக்கிறது' என்ற எண்ணம் திருவாச்கத்தை கினைக்கும்போதெல்லாம் என் உள்ளே எழுகின்றது. - - திருவாசகப் பகுதிகளில் ஒன்ருகிய திருவெம் பாவைக்கு விளக்கம் சொல்லி விரிவுரை ஆற்றும் வாய்ப்பு எனக்குச் சில முறை கிடைத்தது. அந்தப் பகுதிக்குரிய விளக்கத்தைத் தனி நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இறைவன் திருவருளால் அது முற்றுப் பெறும் என்று நம்புகிறேன். இடையில் திருவம்மானை என்னும் பகுதியில் ஆழ்ந் தேன். இருபது பாட்டுக்கள் அடங்கிய அதில் ஈடு பட்டுச் சிந்தித்தேன். சிந்திக்கச் சிந்திக்க, அதன் நுட்பமும் திட்பமும் தெரியலாயின. அந்த உணர்வோடு இருக்கும் போது, அதன் விளக்கத்தை எழுத்தில் வடிக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. படித்து உணரும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/7&oldid=894967" இலிருந்து மீள்விக்கப்பட்டது