பக்கம்:திரு அம்மானை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வானோர் அறீயா வழி - 133. இறைவன் தமக்குச் சிவானந்தத்தைத் தந்தருளிய தையும், அளவிறந்த உயிர்களுக்குத் தலைவனாக நின்று காத்தருளுவதையும் சொன்னார். ஊனாய் உயிராய், உணர்வாய், என் உள்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய், வானோர் அறியா வழிஎமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார், சீர்ஒளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல் உயிர்க்கும் 'கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்!

  • அம்மானை ஆடும் பெண்ணே , என்னுடைய உடம்பாகி, . உயிராகி, உணர்வாகி, என் உள்ளே புகுந்து இரணந்து, தேனாகவும் அமுதமாகவும் இனிய செங்கரும்பிலிருந்து. உண்டாக்கிய கற்கண்டாகவும் இனிமை தந்து, தேவர்களும் --அறியாத பேரின்ப வழியை அடியே முக்கு வழங்கி யருளும், தேன் நிறைந்த கொன்றை மலரை அணிந்த வீர - ராகிய சிலபெருமான், சிறந்த அகவொளியை யுடையதும் அழியாததுமாகிய மெய்ஞ்ஞானமாகியும், கணக்கு இல்லாத பல உயிர்களுக்கும் தலைவராகியும் நின்ற வண்ணத்தை விரித்துச் சொல்லிப் பாடுவோம்."

- [தேனாய்: தேனுமாய் என்று எண்ணும்மையை விரித்துப் பொருள் கொள்க. அவ்வா றன்றி அமுதமும் கட்டியும் என்பவற்றிலுள்ள உக்மைகளை இறந்தது தழ் இய எச்சவும்மைகளாகக் கொள்வதும் ஒன்று. ஊனாய் முதலிய மூன்றும் கலந்த வகையைச் சொல்லியவை. தேனாய் முதலிய மூன்றும் இன்பம் தந்ததைக் குறித்தவை. ஊனுக் குத் தேனாகவும், உயிருக்கு அமுதமாகவும், உணர்வுக்குத் தீங்கரும்பின் கட்டியாகவும் இனித்தவன் என்று இணைத்துப் பொருள் கொள்வதும் பொருந்தும் . தீங்கரும்பு என்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/147&oldid=1418541" இலிருந்து மீள்விக்கப்பட்டது