பக்கம்:திரு அம்மானை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திரு அம்மானை கட்டிக் கரும்பாகிய செங்கரும்பை; இனிமையை யுடைய கரும்பு என்பது சொற்பொருள். கட்டி-கற்கண்டு. வானோரும் என்ற சிறப்பும்மை தொக்கது. வழி-அடையு: மாறு. எமக்கு என்றது. அடியார்களையும் உளப்படுத்திச் . சொன்னது. இறைவன் அருள நுபவம் பெற்ற பெருமிதத்..' தால் தம்மையே சுட்டியதாகவும் கொள்ளலாம். “நாம் ஆர்க்கும் குடியல்லோம்" என்று அப்பரும் இத்தகைய பெருமிதத்தில் பாடியது காண்க. - தேன் ஆர்-தேன் நிறைந்த; வண்டு ஒலிக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்; சூழ்த்தமது கரமுரலும். தாரோயை என்று திருவாசகத்தில் பிறிதோரிடத்தில் - வருவது காண்க, மலர்க் கொன்றை - கொன்றை மலர். சேவகனார்--வீரர். புற ஒளியை விலக்கச் சீர் என்ற அடை கொடுத்தார்; சீர் ஒளி-உள்ளொளி. ஆனா--அமையாத; அழியாத. கோன்---தலைவன்; அரசன், நின்றவாறு என்றது. - * நின்றவா என நின்றது. சேவகனார் நின்றவா. கூறுதும் என்று முடிக்க, கூறுதும்--விரித்துரைத்துப் பாடுவோம், காண்: அசை.) - - - - - - - - - இறைவன் தமக்குச் சிவானந்த அங்பவத்தை அருளிய சிறப்பை நினைந்து பாடியது இது. திருவம்மானையில் வரும் 16-ஆவது பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/148&oldid=1418540" இலிருந்து மீள்விக்கப்பட்டது