பக்கம்:திரு அம்மானை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அம்மானை 1. அங்கருணை வார்கழல் மாணிக்கவாசகர் இறைவனிடம் ஆராத அன்பு கொண்டவர். உருகி உருகி அவனுடைய புகழைப் பாடு கிறவர். பெண்கள் கூடி விளயாடும் விளேயாடல்களைக் கண்ட பொழுதெல்லாம் அவரே பெண்ணுப் விடுவார். பெண்களோடு பெண்ணுகத் தம்மை உள்ளத்தளவிலே மாற்றிக்கொண்டு, சிவபெருமான் புகழைப் பாடிக் களிப்பார். அந்தப் பெண்களோடு சேர்ந்தே தம்மை மறந்து களித்துக் கூத்தாடியிருக்கவும் கூடும். - - பெண்கள் அம்மானே ஆடிப் பாடிக் கொண்டிருக் கிருர்கள். மூன்று அம்மானேக் காய்களைக் கொண்டு இரண்டு காய்களே இரண்டு கைகளிலும் மற் ருென்றை மேலும் இருக்கும்படியாக மாற்றி மாற்றி ஆடுகிரு.ர்கள்; மிகவும் கவனமாக ஆடுகிறர்கள். அவர்கள் பாடும் போது சிவபெருமானுடைய புகழைப் பாடி ஆடுகிருர்கள். அவர்களில் ஒருவராக இருந்து பாடுகிருர் மணிவாசகர். இறைவனுடைய திருவடியை முதலில் கினேக்கிருர், அந்தப் பாதம் ஒரு காலேக்கு ஒரு கால் அழகு பொங்கித் ததும்புவது; அருள் நிரம்பிப் பொங்குவது; தாமரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/15&oldid=894797" இலிருந்து மீள்விக்கப்பட்டது