பக்கம்:திரு அம்மானை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திரு அம்மானே மலரைப் போலத் தண்மையும் செம்மையும் மலர்ச்சியும் மணமும் எழிலும் மென்மையும் நிரம்பிப் பொங்குவது; பொங்கும் மலர்ப்பாதம். அதனேக் காணவேண்டும் என்று தன் வலிமையிலே நம்பிக்கை கொண்டு திருமால் அதைத் தேடப் புகுந்தான். "பாதாளம் ஏழினும் கீழ்ச் சொற்கழிவாக' உள்ள அதைக் கீழே சென்று காணலாம் என்று கினைத் தான். பன்றி வடிவம் எடுத்துப் பூமியைத் தோண்டி அகழ்ந்து சென்று பார்க்க முயன்ருன், போகப் போகப் பாதம் இருக்கும் இடம் தெரியவில்லை. எல்லாப் பொருளையும் கண்டுவிடும் ஆற்றலை உடைய செம்மையான கண்ணே உடையவன் அவன். முயன்று தேடிச் செல்லச் செல்ல அந்தக் கண்கள் பின்னும் சிவப்பை அடைந்தன. அப்படிச் சென்று இட்ந்தும் அவல்ை காணமுடியவில்லை. காணவேண்டும் என்ற அன்பும் ஆர்வமும் கொண்டு நாடியிருந்தால் அதைக் கண்டிருக்கலாம். கண்டு விடுவோம் என்ற ஆணவமுனைப்போடு, தன் வலிமையிலே நம்பிக்கை கொண்டு முயன்றதல்ை அதனைக் காண முடியவில்லை. - செங்கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பரிய பொங்கும் மலர்ப்பாதம் 4. காமாக முயன்று அதைக் கண்டு விடலாம் என்ற ஆணவ முனைப்பு இருக்கும் வரையிலும் அந்தத் திருவடி தட்டுப்படாது. இந்த உண்மையை உலகத்துக்குக் காட்டவே இந்தத் திருவிளையாடல் நடைபெற்றது. அத்தகைய திருப்பாதம் அடியவர்களுக்கு எளிதாக இருக்கிறது. அன்பில்ை உருகும் அடியவர்கள் அதைத் தேடிச் செல்வதில்லை. அடியவர்களைத் தேடிக் கொண்டு அதுவே செல்கிறது. . . - யாரும் காண்பதற்கரிய அந்தத் திருப்பாதம் அடியவர் களுக்கு அருள் செய்து அவர்களுக்குத் தன்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/16&oldid=894820" இலிருந்து மீள்விக்கப்பட்டது