பக்கம்:திரு அம்மானை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கருணே வார்கழல் 3 கொடுப்பதற்கு விரைகிறது. அடியவர்கள் வாழும் இந்தப் பூதலத்துக்கே வந்தருள்கிறது. இறைவன் தன் அடியார் களுக்குத் தன் திருவடி இன்பத்தை வழங்க இங்கே வருகிருன். - பொங்கும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளி. ‘நம்முடைய திருவடியைக் காணுவதற்கு இவர்கள் அன்பினல் ஏங்கித் தவிக்கிருர்களே! இவர்களுக்கு அருள் வழங்கவேண்டும்' என்று திருவுள்ளம் கொண்டு அவன் இங்கே போந்தருள்கிருன். - இறைவனுடைய திருவடி பிறப்பை அறுக்கும் திருவடி.

  • பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்” என்பார் திருவள்ளுவர். இறைவன் அடியைச் சேர்ந்தால் பிறப்பு அற்றுவிடும். இறைவன் திருவடியைத் தேடிச் சென்று அடைய முடியாது. ஆலுைம் அவன் அதனைத் தன் அடியார்களுக்குக் காட்டத் தானே கிலத்தில் அடி பதிய வந்து அவர்களே ஆட்கொள்கிருன். வானின்று இழிந்து மழை பொழிந்து குளத்தில் தேங்குவதைப் போல, அந்த அடி அடியார்களிடம் வந்து தங்கி அவர்களுடைய பிறப்பை அறுத்து ஆட்கொண்டருள்கிறது. - - மழை பெய்யும் போது, இன்னபடி இருந்தால்தான் நீர் அங்கே பொழியும் என்று இல்லை. சிறிய பள்ளமானலும் பெரிய குளமானுைம் அது நீரைப் பொழிகிறது. இறைவனும் அப்படியே அருள் மழையைப் பெய்கிருன். இது அழுக்கு கிரம்பிய பள்ளமாயிற்றே என்று மழை கினைப்பதில்லை. அடியார்கள் தம் தகுதி உயர்ந்ததென்று எண்ணமாட்டார்கள். இறைவன், தம் தகுதி போதாம்ல் இருந்தாலும், அதனேக் கருதாமல் கருணேயை வழங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/17&oldid=894840" இலிருந்து மீள்விக்கப்பட்டது