பக்கம்:திரு அம்மானை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 திரு அம்மானை - கொன்றைப் பூவைச் சூடுவேன்; அவ்வாறு சூடிச் *சிவபெருமானுடைய திருத்தோள்களை அணைவேன்; அவ்வாறு அணைந்து அவனைத் தழுவி, அதனால் உண்டாகும் இன்ப மயக்கத்திலே மயங்கி நின்று, பிறகு அவன் சிறிது புறக்கணிப்பதாகக் கண்டாலும் ஊடுவேன்; அவனுடைய செவ்வண்ணத் திருவாயிலிருந்து வரும் சொல்லுக்கும், அதன் இதழூறலுக்கும் ஏங்கி உருகுவேன்; என் உள்ளம் - உருக நின்று உள்ளே தேடுவேன்; அவ்வாறு தேடி - அப்பெருமானுடைய திருவடியையே தியானிப்பேன் அது தோற்றாமல் சிறிது தாழ்க்குமானால் வாடுவேன்; அவனருள் -- கிடைக்கும் என்ற உறுதியினால் மீட்டும் தளர்ச்சி நீங்கிக் - கிளர்ச்சியைப் பெறுவேன், தன் திருக்காத்தில் அனலை - . ஏந்திக் கூத்தாடும் அந்தப் பெருமானுடைய செம்மையை * . உடைய திருவடிகளையே இப்போது பாடுவோமாக [சூடுவேன். தலையில் அணிவேன்; புனைவேன் என்று --பொதுவாகவும் கொள்ளலாம். பூங்கொன்றை கொன் றைப்பு; முன்பின்னாகத் தொக்க தொகை; பொலிவு பெற்ற கொன்றை என்றும் பொருள் கொள்ளலாம். வீரம் மிக்க தாதலின் திரள் தோள் ஆயிற்று. கூடுதல்-தோளை அணைதல். முயங்குதல் - ஆரத்தழுவு தல், மயங்கி நின்று அந்த இன்ப --மயக்கத்தில ஆழ்ந்து. ஊடுவேன்-பிறகு சிறிதே புறக் கணிப்பவன் போல இருப்பது கண்டு ஊடல் கொள்வேன், செவ்வாய்க்கு செவ்வாயிலிருந்து - வரும் சொல்லுக்கும் இதமூறலுக்கும்; செவ்வாய்: ஆகுபெயர். தேடுவேன் உள் *ளத்தே தேடுவேன். அவன் என் காதல் திறத்தைக் காணச் சிறிதே மறைய, அப்பொழுது அவனைத் தேடுவேன் என்றும் கொள்ளலாம். கழல்- திருவடி; ஆகுபெயர். கழலே: எ, பிரிநிலை; பிறிதொன்றையும் நினையாது அந்தத் திருவடித் தியானத்திலே ஆழ்வேன் என்றபடி.. வாடுவேன்..அவனருள் இன்னும் முற்றக் கிடைக்கவில்லையே என்று வாடுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/154&oldid=1418552" இலிருந்து மீள்விக்கப்பட்டது