பக்கம்:திரு அம்மானை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திரு அம்மான கினைத்துத் தியானம் செய்திருக்கிறர்கள். ஆனல் ஒரு வேறு பாடு. அவர்கள் செய்த தவமெல்லாம். ஏதேனும் ஒரு பயனக் கருதியே செய்தவை. தம்முடைய பதவி பறி போகாமல் இருக்கவும், இன்னும் மேலான பதவியைப் பெறவுமே அவர்கள் தவம் செய்து பழக்கம். - * வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்; மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாம் தொழவேண்டி ” என்று மணிவாசகரே வேருே.ரிடத்தில் பாடுவார். அந்த வாசனை அவர்களே விட்டுவிடுமா? இப்பொழுதும் அந்த விருப்பம் அவர்களே விடவில்லை. மனிதர்களே விடத் தாம் மேலானவர்கள் என்ற எண்ணம் அவர்களிடமிருந்து எப்ப்ோதும் நீங்குவதில்லை. இப்போதும் அந்த எண்ணத் தோடே தவம் புரிந்தார்கள். மனிதர்கள் பெருத பெரிய மேலான பயனைப் பெறவேண்டும் என்ற ஆசை அவர்கள் உள்ளத்தில் சுருதி போட்டுக் கொண்டிருந்தது. 'உள்குவார் - உள்ளத் திருக்கும் இறைவன் இந்த இயல்பை அறிய மாட்டான? - தேவர்கள் தவம் புரியத் தொடங்குவதை மாலும் அயனும் இந்திரனும் பார்த்தார்கள். காம் மட்டும் சும்மா இருப்பதா?’ என்று அவர்களும் தவம்செய்யப் புகுந்தார்கள். அவர்களுடைய உள்ளத்திலும் தாம் உயர்ந்தவர்கள் என்று இருந்த எண்ணம் போகவில்லை. அவர்களும் உடம்பு வற்றிப் போகத் தவம் செய்தார்கள். காட்டில் அமர்ந்து தம்மைச் சுற்றியும் புற்று எழுந்து வளரும்படியாகத் தவத்தில் ஆழ்ந்தார்கள். - - - - ஆனல் அவர்களுக்கு இறைவன் காட்சி கிடைக்க வில்லை. அகந்தையை அடியோடே போக்கி நிற்கத் தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/44&oldid=894912" இலிருந்து மீள்விக்கப்பட்டது