பக்கம்:திரு அம்மானை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அமுதின் தெளிவு தேவர்கள் எல்லாரும் சற்றே சிந்திக்கப் புகுந்தார்கள். உலகத்திலுள்ள மக்கள் பக்தியும் தவமும் செய்து: இறைவன் திருவருளைப் பெறுகிருர்கள் என்பதை அறிந்தார்கள். நாமும் அப்படித் தவம் செய்து திருவருளேப் பெற்ருல் என்ன? நமக்கு ஆற்றலில் குறைவா? எண்ணியதை எண்ணியபடி முடிக்கும் திண்மையில்தான் குறைவா? ங்ாமும் ஏன் தவம் செய்யக் கூடாது?’ என்று: எண்ணினர்கள். 'உண்ணுதலே விட்டுப் பட்டினி கிடங்து நாமும் தவம் செய்யப் புகுவோமே!" என்று தீர்மானித். தார்கள். உடனே ஒரு காட்டை அடைந்தார்கள். வான்வந்த, தேவர்கள் கான் வந்து விட்டார்கள். கண்ணே மூடிக் கொண்டு தவம் செய்யலானர்கள். அவர்களிற் சிலர் உடம்பு வற்றி எலும்பும் தோலும் ஆகிவிட்டது. சிலர் உட்கார்ந்த இடத்தில் புற்றே எழுந்து விட்டது. கடுமையான தவத்தை மேற்கொண்டார்கள். யாரும் செய்ய முடியாத அளவுக்கு அவர்கள் தவம் செய்யலானர்கள். - புறத் தோற்றத்தில் அவர்கள் தவமுனிவர்களே ஆகிவிட்டார்கள. ஆல்ை அவர்கள் உள்ளம் எப்படி இருக்கிற்து? அவர்கள் தவம் செய்து பழக்கப் படடவர்களே. எவ்வளவோ சமயங்களில் இறைவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/43&oldid=894910" இலிருந்து மீள்விக்கப்பட்டது